மூன்றாம் கண்.,: டீசல், கெரசின், காஸ் விலை உயர்வு ரத்து செய்யப்படாது: பிரணாப் முகர்ஜி

Pages

Wednesday, June 29, 2011

டீசல், கெரசின், காஸ் விலை உயர்வு ரத்து செய்யப்படாது: பிரணாப் முகர்ஜி



டீசல், கெரசின் மற்றும் சமையல் காஸ் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. மேலும், வரிகள் குறைக்கப்பட்டதும்,
நிதி பற்றாக்குறையில் பாதிப்பை ஏற்படுத்தாது,'' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். இந்திய தொழில் சம்மேளனமும், வாஷிங்டனில் உள்ள புரூக்கிங் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து, "அமெரிக்க - இந்தியப் பொருளாதாரம் மற்றும் நிதி பங்களிப்பு' என்ற மாநாட்டை, வாஷிங்டனில் நடத்தின. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:இந்தியாவில் உயர்த்தப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. விலை உயர்வில் ஒரு பகுதியை மட்டுமாவது ரத்து செய்வது என்ற கேள்விக்கும் இடமில்லை. விலையை உயர்த்தியது உயர்த்தியது தான். மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை குறைத்ததால், நிதி பற்றாக்குறையில் எந்தப் பாதிப்பும்ஏற்படாது.இந்தப் பற்றாக்குறை, வரி வசூல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம் சரி செய்யப்படும். கடந்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.7 சதவீதமாக இருந்தது. அதை நடப்பு நிதியாண்டில்( 2011-12) 4.6 சதவீதமாகக் குறைக்கமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 சதவீதமாக இருக்கும். வளர்ச்சி வீதம் பாதிக்கப்படாமலும், பணவீக்கம் அதிகரிக்காமலும் இருக்கும் வகையில், ஒரு சமநிலையை கடைபிடிக்க அரசும், ரிசர்வ்வங்கியும் போராடி வருகின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவில்லை எனில், நலிந்த பிரிவினர் அதிக சிரமத்திற்கு ஆளாகிவிடுவர். அதனால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமானது.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...