மூன்றாம் கண்.,: சிலியில் எரிமலை வெடித்தது பூமியின் பாறையில் 10கிமீ நீஅளத்திற்கு பிளவு

Sunday, June 5, 2011

சிலியில் எரிமலை வெடித்தது பூமியின் பாறையில் 10கிமீ நீஅளத்திற்கு பிளவு




சிலியின் தெற்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து அதிலிருந்து சாம்பல் புகை கிளம்பியுள்ளது. மேலும் அப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கமும் ஏற்பட்டு வருவதால் அப்பகுதியிலிருந்து சுமார் 3,500 பேர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். புயேஹியூ என்று
அழைக்கப்படும் இந்த எரிமலையிலிருந்து வெண்புகை கிளம்பி அப்பகுதியே புகை மயமகாக் காட்சி அளிக்கிறது. பூமியின் பாறையில் 10கிமீ நீஅளத்திற்கு பிளவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முதலில் நேற்று காலையிலிருந்தே எண்ணற்ற சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அரசு எச்சரிக்கை அடைந்தது. பிறகு மதியம் எரிமலை வெடித்தது. தேசிய அவசரநிலை அலுவலகம் ஒரு மணி நேரத்தி 230 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளனர். எரிமலை சாம்பற்புகை ஆண்டீஸிலிருந்து அர்ஜென்டீனாவின் சுற்றுலா நகரமான சான் கார்லோஸ் டீ பேரிலோகி வரை வானில் பரவியதால் விமான நிலையம் மூடப்பட்டது. சாண்டியாகோவிலிருந்து 1000கிமி தொலைவில் இந்த எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது.

Share/Bookmark

2 comments:

  1. கமாண்டில் சொல் சரிபார்ப்பை எடுத்து விடவும்..
    கமாண்ட் போட வசதியாக இருக்கும்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...