கலைஞர் டி.வி.க்கு பணம் அளித்தது தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த 19 போலி நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.
2ஜி அலைக்கற்றை வழக்கு பூதாகரமாகத் தொடங்கியதும், சினியுக் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.200 கோடி கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இந்த நிறுவனங்களை கலைஞர் டி.வி. பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த 19 நிறுவனங்களும் ரூ.52.20 கோடியை சபையர் மீடியா என்கிற நிறுவனத்துக்கு அளித்ததாகவும், அதன் பிறகு சபையர் நிறுவனம் அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.83 கோடி வழங்கியதாகவும், பிறகு அந்த நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.69.61 கோடி மாற்றப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக வருமான வரித்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பணத்தைக் கொண்டுதான் கரீம் மொரானிக்குச் சொந்தமான சினியுக் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.200 கோடி கடனை, ரூ.230.31 கோடியாக கலைஞர் டி.வி. நிர்வாகம் திருப்பிச் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது
இன்னும் கண்ண கட்டுதே ..எத்தனை பேரோ....
ReplyDelete