மூன்றாம் கண்.,: தொடரை வென்றது இந்தியா; 3-வது டெஸ்ட் டிரா

Monday, July 11, 2011

தொடரை வென்றது இந்தியா; 3-வது டெஸ்ட் டிரா



மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. எனினும் முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. மேற்கிந்தியத்தீவுகளில் தொடர்ந்து முறையாக இரண்டாவது டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.
முன்னதாக நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் இந்தியா வென்றது. ஒருநாள் போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியாவே வெற்றி பெற்றதது கிங்ஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பிரிட்ஜ்டவுணில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. சாதனை: மேற்கிந்தியத்தீவுகளில் ஒருநாள் போட்டி, டெஸ்ட் தொடர் இரண்டிலும் வென்ற முதல் இந்திய அணி என்ற சாதனையும் இப்போது படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அங்கு சென்ற இந்திய அணி எப்போதுமே டெஸ்ட், ஒருநாள் தொடர் இரண்டையும் ஒரு சேர வென்றதில்லை. டொமினிகாவில் நடைபெற்ற 3-வது டெஸ்ட்டில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. எனினும் அப்போது மேலும் 15 ஓவர்கள் வீசப்பட வேண்டியிருந்தது. இதனால் இறுதி டெஸ்ட் இரு தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது. முன்னதாக மேற்கிந்தியத்தீவுகள் முதல் இன்னிங்ஸில் 204 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 347 ரன்களை எடுத்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் சிறப்பாக ஆடினர். கே.எ. எட்வர்ட்ஸ் 110 ரன்கள் எடுத்தார். சந்தர்பால் 116 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 322 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸ்:இதனால் இந்திய அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முகுந்த், விஜய் ஆகியோர் களம் இறங்கினர். எஃப். எச். எட்வர்ட்ஸ் வீசிய முதல்பந்திலேயே முகுந்த் ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து விஜயுடன் திராவிட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். ஸ்கோர் 73 ஆக உயர்ந்த போது 45 ரன்களில் விஜய் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 8 ரன்களே எடுத்து வெளியேறினார். தொடர்ந்து திராவிட்டுடன் லட்சுமண் இணைந்தார். அணியின் ஸ்கோர் 94 ஆக இருந்தபோது போட்டி முடிவுக்கு வந்தது. திராவிட் 45 ரன்களுடனும், லட்சுமண் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் ரவி ராம்பால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...