மூன்றாம் கண்.,: நோட்டோ படையினரின் ஹெலிகாப்டரை தாலிபான்கள் சுட்டு வீழ்த்தியதில் 38 பேர் பலி

Saturday, August 6, 2011

நோட்டோ படையினரின் ஹெலிகாப்டரை தாலிபான்கள் சுட்டு வீழ்த்தியதில் 38 பேர் பலி


கிழக்கு ஆப்கானிஸ்தானில் நோட்டோ படையினரின் ஹெலிகாப்டரை தாலிபான்கள் சுட்டு வீழ்த்தியதில் 38 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 31 பேர் நேட்டோ படையினர் என்றும், 7 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஆப்கனின் மத்தியகிழக்கு பகுதியில் உள்ள வாந்துக் மாகாணத்தில் மேற்கூறிய ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதனிடையே இந்த தாக்குதலுக்கு தாலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது தாங்களே என்றும், ஆப்கனில் நிகழ்ந்த மிகப் பெரிய உயிர்ச்சேதம் இது என்றும் கூறினார்.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...