மூன்றாம் கண்.,: ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும்: பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு

Friday, August 12, 2011

ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும்: பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு


Last Updated : சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
முன்னதாக எழுத்து மூலம் பதில் அளிக்க ஜெயலலிதாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லையெனில் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவரது சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிபதி, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் எந்த தேதியில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்ற விவரத்தை நீதிபதி வெளியிடவில்லை.

Share/Bookmark

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...