மூன்றாம் கண்.,: பயங்கரவாதத்திற்கு அரசு அடிபணியாது: பிரதமர் மன்மோகன் சிங்

Wednesday, September 7, 2011

பயங்கரவாதத்திற்கு அரசு அடிபணியாது: பிரதமர் மன்மோகன் சிங்


டெல்லி குண்டுவெடிப்பு கோழைத்தனமான தாக்குதல் என்றும், பயங்கரவாத செயல்களுக்கு தமது அரசு ஒருபோதும் அடிபணியாது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று பங்காளதேஷ் சென்ற பிரதமர், அங்கிருந்து டெல்லி குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது மேற்கண்டவாறு கூறினார். குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்காக தமது இருதயம் வ்ருந்துவதாகவும், இது ஒரு கோழைத்தனமான பயங்கரவாத செயல் என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாதத்தை நாங்கள் முறியடிப்போம்
;ஒருபோதும் அதற்கு அடிபணிய மாட்டோம்.இது ஒரு நீண்ட யுத்தம்.அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவும் எங்களுக்கு தேவை.அவ்வாறு ஆதரவு கிடைத்தால்தான் பயங்கரவாதத்தை எங்களால் நசுக்க முடியும் என்று மன்மோகன் சிங் மேலும் கூறினார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...