மூன்றாம் கண்.,: நம்பிக்கெட்டவன் நான் கருணாநிதி விரக்தி

Saturday, October 1, 2011

நம்பிக்கெட்டவன் நான் கருணாநிதி விரக்தி


அடுத்து, தி.மு.க., ஆட்சி தான் வரும் என்று, லட்சக்கணக்கானோர் சொல்லி, அதை நம்பிக் கெட்டவன் நான் என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். அண்ணாதுரை,
ஈ.வெ.ராமசாமி மற்றும் தி.மு.க., பிறந்தநாள் விழா ஆகியவை, முப்பெரும் விழாவாக நேற்று நடந்தன. இதில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்றுப் பேசியதாவது: அடுத்து தி.மு.க., ஆட்சி தான் வரும் என்று, லட்சக்கணக்கானோர் சொல்லி, அதை நம்பிக் கெட்டவன் நான். கடந்த தேர்தலில், தி.மு.க., சரித்திரப் பிரசித்தி பெற்ற தோல்வியை அடைந்தது. ஜனநாயக விளையாட்டால், இந்த விபரீதம் நடந்துள்ளது. இங்கு மட்டுமல்ல, இலங்கையிலும் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மைனாரிட்டி அரசாக இருந்த நாங்கள், ஐந்து ஆண்டுகளும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் சென்றோம். ஆனால், அ.தி.மு.க., மெஜாரிட்டியாக இருந்து, மூன்று மாதத்தில் கூட்டணிக் கட்சிகளை விரட்டி விட்டது.தி.மு.க., ஆட்சியை, ஒரு அமைச்சர் கயவர் ஆட்சி என்கிறார். அமைச்சர் உதயக்குமார் பேசும்போது, கருணாநிதியின் உயிர் தூக்கில் போகுமோ? தூக்கத்தில் போகுமோ? என்கிறார்.எப்படிப் போனாலும், தமிழ்த் தாய் மடியில் தான் போகும்; அதற்காக கவலைப்படவில்லை. ஆனால், தூக்கத்திலும், துக்கத்திலும் போகும் உயிர் இதுவல்ல. தமிழன், எப்போது இன உணர்ச்சியுடன் வாழ்கிறான் என்ற செய்தி கிடைக்கிறதோ, அப்போது தான் என் உயிர் போகும்.தி.மு.க.,வை யாரும் வீழ்த்த முடியாது. இது, பட்ட மரமல்ல. மலர்களைக் கொண்ட மரம். உயிரைப் பணயம் வைத்தாவது, இனப்போராட்டத்தில் தி.மு.க., வெல்லும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
குடும்பத்தினர் இல்லாத தி.மு.க., விழா :தி.மு.க., முப்பெரும் விழாவில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இதுகுறித்து, கருணாநிதி பேசும்போது,”சொன்னதைக் கேட்காமல், தேர்தல் பணிக்காக ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், உடல் நலிவுற்று, மருத்துவமனையில் உள்ளார்என்றார்.இதேபோல், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் அழகிரி, பேரன் தயாநிதியும் பங்கேற்கவில்லை. கருணாநிதியின் மகள் கனிமொழி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் உள்ளார்.முதல் முறையாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் இல்லாமல், தி.மு.க., தலைவர் பங்கேற்ற விழா நடந்துள்ளது.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...