மூன்றாம் கண்.,: ஐஸ்வர்யா 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார்

Pages

Thursday, November 3, 2011

ஐஸ்வர்யா 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார்


 விரைவில் தாயாகப்போகும் நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் செவ்வாய்க்கிழமை தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களை
மட்டும் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு அழைத்திருந்தார். ஐஸ்வர்யா ராய் தனது பிறந்தநாளை பிரமாண்டமான முறையில் கொண்டாட இருப்பதாக முதலில் கூறப்பட்டது. அதற்கு மும்பை பிரமுகர்கள் பலர் வருவர் என்றும் கூறப்பட்டது. ஆனால், எளிய முறையில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அண்மையில்தான் ஐஸ்வர்யா ராய்க்கு ஆசி வழங்கும் சடங்கு ஒன்று அமிதாப் பச்சன் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஏராளமான நடிகர் நடிகைகள் வந்திருந்து ஐஸ்வர்யாவை ஆசீர்வதித்தனர். மாதுர் பண்டார்கரின் ஹீரோயின் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் கர்ப்பமாக இருப்பதால் அவருக்குப் பதில் கரீனா கபூர் நடிக்கிறார்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...