மூன்றாம் கண்.,: நடிகர் கார்த்தி-ரஞ்ஜனி திருமணம் விமரிசையாக நடைபெற்றது

Pages

Sunday, July 3, 2011

நடிகர் கார்த்தி-ரஞ்ஜனி திருமணம் விமரிசையாக நடைபெற்றது
நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி-ரஞ்ஜனி திருமணம் கோவை கொடிசியா அரங்கில் தமிழ் முறைப்படி திருமந்திரங்கள் ஓத வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கார்த்திக்கும் ஈரோடு மாவட்டம்
குமாரசாமிக்கவுண்டன்பாளையம் சின்னசாமி-ஜோதிமீனாட்சி தம்பதியினரின் மகள் ரஞ்ஜனிக்கும் கோவை கொடிசியா அரங்கில் திருமணம் நடைபெற்றது. திருமண மேடை வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டு, மணமக்கள் இருக்கைக்கு பின்புறம் வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் சிலை அலங்கரித்து  வைக்கப்பட்டிருந்தது. மணமேடையிலும், முன்புறமும் வண்ணப்பூக்களின் அலங்காரம் கண்களை கவர்ந்தன. அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டும் அரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர். மணமேடைக்கு  அதிகாலை 5.15 மணிக்கு மணப்பெண் ரஞ்ஜனி அழைத்துவரப்பட்டார். அவருக்கு தாய்மாமன் சீர் செய்யப்பட்டு, நெற்றிப் பட்டை அணிவிக்கப்பட்டது. 5-45 மணிக்கு மணமகன் கார்த்தி மணமேடைக்கு வந்தார். பேரூர் மாணிக்கவாசகர் அருட்பணி மன்றத்தைச் சேர்ந்த பழ.குமரலிங்கம் தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தார். திருப்பல்லாண்டு, பெரியபுராணம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவாகசம் என தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்ட பின் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். அதன் பின் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு அக்னி வலம் வந்து பெற்றோர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர் சூர்யா-ஜோதிகாவிடம் ஆசி பெற்றனர். மணவிழாவில் நடிகர்கள் பிரபு, ராஜேஷ், நிழல்கள் ரவி, பாண்டியராஜன், சரவணன், நடிகைகள் நக்மா, ராதிகா, திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயக்குமார், கே.எஸ்.ரவிக்குமார், பாலா, சங்கர் தயாளன், ஹரி, மனோபாலா, இசை அமைப்பாளர் சங்கர்கணேஷ், பாடகி சுசித்ரா, கவிஞர் அறிவுமதி, சாலமன் பாப்பையா, ஆர்ட் டைரக்டர் ராஜீவன், ரவி கே.சங்கர், தயாரிப்பாளர்கள் திருப்பூர் பாலு, கோவை மணி, எஸ்.ஏ.ராஜ்கண்ணு, ஞானவேல் ராஜா உள்ளிட்டோரும், ரசிகர்களும் திரண்டிருந்து மணமக்களை வாழ்த்தினர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...