மூன்றாம் கண்.,: ஜப்பான் பயங்கர நிலநடுக்கம்

Pages

Monday, July 25, 2011

ஜப்பான் பயங்கர நிலநடுக்கம்

இன்று வடகிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது.ஜப்பான் அடிக்கடி இயற்கை சீற்றத்தால்
பாதிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் தான் பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஜப்பான் படாதபாடு பட்டது. அங்குள்ள ஃபுகுஷிமா அணுஉலை சேதமடைந்து, கதிர்வீச்சு ஏற்பட்டது.இந்நிலையில் இன்று வடகிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட இரட்டைப் பேரழிவுகளில் சிக்கி மெதுவாக மீண்டு கொண்டிருக்கும் ஃபுகுஷிமா அருகில் தான் இந்த நிலநடு்ககம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தவித தகவல்களும் இல்லை. சுனாமியில் சிக்கி சீரழிந்த அதே இடத்தில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை பீதியடையச் செய்துள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...