மூன்றாம் கண்.,: சிங்கப்பூரில் இருக்கும் ரஜினிகாந்த் சென்னை வருகிறார்

Pages

Monday, July 11, 2011

சிங்கப்பூரில் இருக்கும் ரஜினிகாந்த் சென்னை வருகிறார்


சிங்கப்பூரில் இருக்கும் ரஜினிகாந்தை சென்னைக்கு அழைத்து வருவதற்காக, அவரின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கடந்த ஏப்ரல் 29-ம் தேதி உடல்நல குறைவு ஏற்பட்டது. சென்னையில் சில நாட்கள் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்து ஒரு மாத காலமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ரஜினிகாந்த் பூரண குணமடைந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இனி நீங்கள் சென்னைக்கு போகலாம் என்று மருத்துவர்கள் அனுமதி அளித்தனர். இதனையடுத்து ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் நேற்று சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து அவருடைய கணவரும் ரஜினியின் மருமகனுமான நடிகர் தனுஷிடம் கேட்டதற்கு, "சூப்பர் ஸ்டாரின் உடல்நிலை தற்போது முழுவதுமாக தேறிவிட்டது. அவர் விரைவில் சென்னை திரும்புவார். அவரை அழைத்து வருவதற்காகத்தான் என் மனைவி ஐஸ்வர்யா நேற்று சிங்கப்பூர் சென்றிருக்கிறார்," என்றார். ரஜினிகாந்தின் உடல் நிலை கருதி, அவர் எப்போது வருகிறார், எந்த விமானத்தில் சென்னை வருகிறார் என்ற தகவல்கள் எல்லாம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றனவாம்.
Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...