மூன்றாம் கண்.,: ஊக்க மருந்து சோதனையில் மேலும் இரு ஓட்டப் பந்தய வீராங்கனைகள் சிக்கியுள்ளனர்.

Pages

Monday, July 4, 2011

ஊக்க மருந்து சோதனையில் மேலும் இரு ஓட்டப் பந்தய வீராங்கனைகள் சிக்கியுள்ளனர்.

ஊக்க மருந்து சோதனையில் மேலும் இரு ஓட்டப் பந்தய வீராங்கனைகள் சிக்கியுள்ளனர். இவர்களில் அஸ்வினி கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்.
மற்றொருவர் பிரியங்கா பன்வார். இவர்கள் ஜப்பானில் ஜூலை 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறும் ஆசிய சாம்பியன் போட்டியில் பங்கேற்க இருந்தனர். இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 37 வீரர், வீராங்கனைகள் ஜப்பானுக்கு திங்கள்கிழமை செல்ல இருந்தனர். ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் இந்த இருவர் தவிர மற்றவர்கள் ஜப்பான் சென்றனர். முன்னதாக பாட்டியாலாவில் உள்ள தேசிய ஊக்க மருந்து பரிசோதனை அமைப்பால் ஜப்பான் செல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு கடந்த 27-ஆம் தேதி ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் அஸ்வினி, பிரியங்கா இருவரும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் ஜப்பானுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்பதில் இருந்தும் அவர்களை தாற்காலிக நீக்கம் செய்வதாக இந்திய தட,கள கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆசிய சாம்பியன் போட்டியில் தொடர் ஓட்டத்தில் இந்த வீராங்கனைகள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இவர்களுக்கு பதிலாக உடனடியாக எவரையும் குழுவில் சேர்க்கவில்லை. ஜப்பான் செல்லும் 35 பேரில் இருவர், அவர்களுக்கு பதிலாக தொடர் ஓட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு இதேபோன்ற ஊக்க மருந்து சோதனையில் தட, கள வீரர், வீராங்கனைகள் 5 பேர் சிக்கினர். இவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது. இந்த ஊக்கமருந்து சோதனை கடந்த மாதம் 11-14 வரை பெங்களூரில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியின்போது மேற்கொள்ளப்பட்டது.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...