மூன்றாம் கண்.,: வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்: ஸ்டாலின்

Pages

Saturday, July 9, 2011

வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்: ஸ்டாலின்
திமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை சட்டப்படி சந்திப்போம் என்றார் அந்தக் கட்சியின் பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின். பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை திருச்சி வந்த அவர், செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். 
தமிழ்நாடு முழுவதும் நில அபகரிப்பு வழக்கு என்ற பெயரில் பொய் வழக்குகள் திமுகவினர் மீது போடப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வழக்குகளை சட்டப்படி சந்திப்போம். திருச்சி மாவட்டத் துணைச் செயலர் குடமுருட்டி சேகர் மீது தடுப்புக் காவல் சட்டமும் ஏவப்பட்டுள்ளதால், அவரை உடனடியாக ஜாமீனில் எடுக்க முடியவில்லை. ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் குடமுருட்டி சேகர் பணியாற்றிய பகுதிகளில் அதிமுகவுக்கு வாக்குகள் குறைவாகக் கிடைத்தன என்ற காழ்ப்புணர்வு காரணமாக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. திமுக இவற்றைச் சட்டப்படி சந்திக்கும். தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியது பற்றி கேட்கிறீர்கள். அவர் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துள்ளார். பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்தப் பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை' என்றார் ஸ்டாலின்.
Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...