மூன்றாம் கண்.,: சோனியா படத்துக்கு தீவைப்பு: தங்கபாலு கண்டனம்

Pages

Monday, July 18, 2011

சோனியா படத்துக்கு தீவைப்பு: தங்கபாலு கண்டனம்


காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்த பேனருக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்துக்கு அக்கட்சியின் தமிழகத் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

சத்தியமூர்த்திபவன் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சோனியா காந்தி, மன்மோகன்சிங் ஆகிய தலைவர்களின் உருவப் படங்கள் இடம் பெற்றிருந்த பேனரை சமூக விரோதிகள் சிலர் தீ வைத்து கொளுத்தியிருக்கிறார்கள். பேனர் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அலுவலகக் காவலாளிகள் விரைந்து ஓடிப் போய் தண்ணீரைக் கொட்டி தீயை அணைத்திருக்கிறார்கள். இவர்களைக் கண்டதும் சமூகவிரோதிகள் நாலைந்து பேர் ஓடிப் போய்விட்டார்கள். சத்தியமூர்த்தி பவன் வளாகத்திற்குள் இக்கொடியச் சம்பவம் நடைபெற்றிருப்பது கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும். இனியேனும் இதுபோன்ற சம்பவம் ஏதும் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமூர்த்தி பவனுக்கு உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தங்கபாலு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...