மூன்றாம் கண்.,: நடிகர் வடிவேலு மீது மோசடி புகார்

Pages

Friday, July 15, 2011

நடிகர் வடிவேலு மீது மோசடி புகார்
4 ல‌ட்ச ரூபா‌ய் வா‌ங்‌கி‌க் கொ‌ண்டு மலேசிய நட்சத்திர கலைவிழாவுக்கு வராமல் ஏமாற்றியதாக நடிகர் வடிவேலு ‌மீது இணைதள ஆ‌சி‌ரிய‌ர் ஒருவ‌ர் செ‌ன்னை காவ‌ல்துறை ஆணைய‌ரி‌ட‌ம் புகா‌ர் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.
நடிக‌ர் வடிவேலு மீது இணையதள ஆசிரியர் செல்வகுமார் அ‌ளி‌த்து‌ள்ள மோசடி புகா‌ரி‌ல், நடிகர் வடிவேலு மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவுக்கு வருவதாக முன்பணம் பெற்றார். 2007ஆம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த மைக்கேல் கானாவிடம் ரூ.4 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை இன்றுவரை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார். இந்திய தூதரகம் மூலமும் வடிவேலுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. அப்போதைய முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை. கலைநிகழச்ச்சிக்கு வடிவேலு போகாததால் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வடிவேலு மீது புகார் அளிக்க எனக்கு பொது அதிகாரபத்திரம் வழங்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் புகார் அளிக்கிறேன் எ‌ன்று மனுவில் கூ‌றியு‌ள்ளா‌ர். அ‌ண்மை‌யி‌ல் ரூ.45 ல‌ட்ச‌ம் கே‌ட்டு ‌மிர‌ட்டுவதாக இணைய தள ஆசிரியர் செல்வகுமார் நடிகர் வடிவேலு சார்பில் அவரது மானேஜர் காவ‌ல்துறை ஆணைய‌ரிட‌‌ம் புகா‌ர் ‌அ‌ளி‌த்தா‌ர் எ‌ன்பது ‌‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...