மூன்றாம் கண்.,: ரஜினி அட்வைஸ் இமயமலைக்கு செல்கிறார் அஜீத்

Pages

Sunday, September 25, 2011

ரஜினி அட்வைஸ் இமயமலைக்கு செல்கிறார் அஜீத்


நடிகர் அஜீத்குமார் முன்பு ஒரு பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் எனக்கு கடவுள் மாதிரி என்று சொல்லியிருந்தா. அவர் இப்போது ரஜினியின் அட்வைஸ்படி இமயமலைக்கு செல்கிறார். ஒவ்வொரு படம் ரிலீசின்போதும் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 


இமயமலை மகிமை பற்றி அவர் பலரிடம் சொல்லி மற்றவர்களையும் இமயமலைக்கு செல்லும் ஆர்வத்தை தூண்டுவார். இந்நிலையில் அஜீது ஒரு பேட்டியில்,   ‘’எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமான திருத்தலங்களுக்கு போய் வந்திருக்கிறேன். சென்னையிலிருந்து நான்கு முறை திருப்பதிக்கு நடந்தே போயிருக்கிறேன். என்னை கண்டுபிடித்துவிட கூடாது என்பதற்காக  மாறுவேடத்தில் என் நண்பர்களுடன் சென்று வந்திருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த இமயமலை பற்றிய புத்தகம் படித்ததில் இருந்து அங்கேயும் போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. சீக்கரமாக இமயமலைக்கு கிளம்பிடுவேன்னு நினைக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...