மூன்றாம் கண்.,: யுவன் ஷங்கர் ராஜா திருமணம்: திருப்பதியில் நடைபெற்றது

Pages

Friday, September 2, 2011

யுவன் ஷங்கர் ராஜா திருமணம்: திருப்பதியில் நடைபெற்றது


இளையராஜாவின் இளையமகனும், பிரபல இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா-ஷில்பா ஆகியோரது திருமணம் திருப்பதியில் நேற்று நடைபெற்றது.


தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுக்கு சுஜயா என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் ஆனது. கருத்து வேறுபாடு காரணத்தால் இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றார்கள்.இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜாவுக்கும், ஷில்பா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பி.பார்ம். படித்த ஷில்பா, ஆஸ்தியேலியாவில் தொழிலதிபராக இருக்கும் மோகன்-மைதிலி தம்பதியரின் மகள். இவர்களுடைய திருமணத்துக்கு இரு வீட்டினரும் ஒப்புதல் அளித்ததையடுத்து அவர்களுக்கு திருப்பதியில் நேற்று காலை 10.20 மணிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் மணமகன், மணமகள் வீட்டினரும், யுவன் ஷங்கரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...