மூன்றாம் கண்.,: ரகசியத் திருமணமா? பிரபுதேவா, நயன்தாரா மறுப்பு

Pages

Thursday, September 1, 2011

ரகசியத் திருமணமா? பிரபுதேவா, நயன்தாரா மறுப்பு


சில தினங்களுக்கு முன் ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக வெளியான செய்தியை நடிகர் பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் மறுத்துள்ளனர்.
பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்தது முதல் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. பின்னர் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து பிரபுதேவாவை திருமணம் செய்வதற்கு வசதியாக நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து மாறி இந்து மதத்தை தழுவினார். இந்த நிலையில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டுவிட்டனர் என்று கடந்த வாரத்தில் செய்தி பரவியது. அதை இருவரும் மறுத்துள்ளனர். செப்டம்பரில் தங்களது திருமணம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர.

Share/Bookmark

1 comment:

  1. நயன் தாரா வின் ரகசியம் ன்னு தலைப்பு வச்சிருந்தீங்கன்னா கடைல கூட்டமோ கூட்டம் கூடியிருக்குமே!

    க்ளைமாக்ஸ் ஏன் கடைசில சினிவாவுல வைக்கிறாங்க தெரியுமா?இல்லைன்னா இடைவேளைக்கு முன்னாடியே ஓடிருவாங்கன்னுதான்:)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...