மூன்றாம் கண்.,: அஞ்சலி குப்தா தற்கொலை: விமானப் படை அதிகாரி கைது

Pages

Tuesday, September 13, 2011

அஞ்சலி குப்தா தற்கொலை: விமானப் படை அதிகாரி கைது


இந்திய விமானப் படை முன்னாள் அதிகாரி அஞ்சலி குப்தா தற்கொலை சம்பவத்தில் இந்திய விமானப் படை குரூப் கேப்டனும்,
அவரது காதலருமான அமித் குப்தா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.  அஞ்சலி குப்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக அமித் குப்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போபால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சந்தல் தெரிவித்தார்.மத்தியப் பிரதேசத்தின் ரோஹித் நகரில் உள்ள அமித் குப்தாவின் வீட்டில் தங்கியிருந்த அஞ்சலி குப்தா, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குள் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...