மூன்றாம் கண்.,: சில்க் வேடம் பற்றி வித்யாபாலன்!!

Pages

Sunday, September 4, 2011

சில்க் வேடம் பற்றி வித்யாபாலன்!!


சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்திற்காக எனக்கென இருந்த கட்டுப்பாடுகளை, வரைமுறைகளை தாண்டி விட்டேன், என்று நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை தி டர்ட்டிபிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் படமாக்கி வருகிறார்கள். இதில் சில்க் வேடத்தில் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். சில்க்கின் சினிமா வாழ்க்கை, காதல் தோல்வி, தற்கொலை என உண்மை சம்பவங்களை அலசும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி வித்யா பாலன் பேட்டியளித்துள்ளார். அதில், சினிமாவில் நடிக்க எனக்கென நான் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் வைத்திருந்தேன். கவர்ச்சிக்கும் எல்லை வைத்திருந்தேன். ஆனால் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் அந்த வரைமுறைகளை தாண்டி விட்டேன். சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்ததால் கதைக்கு அளவுக்கு அதிகமான கவர்ச்சி தேவைப்பட்டது. எனவே மறுப்பு சொல்லாமல் நடித்தேன். முத்த காட்சியிலும் நடித்துள்ளேன். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை இந்த படம் பதிவு செய்வதால் அவரைப்பற்றி முழுமையாக படித்து அறிந்து இந்த படத்தில் நடித்துள்ளேன், என்று கூறியுள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...