மூன்றாம் கண்.,: அரசியல் குறித்து கேட்காதீர்கள் நழுவும் விஜயகாந்த்

Pages

Sunday, September 18, 2011

அரசியல் குறித்து கேட்காதீர்கள் நழுவும் விஜயகாந்த்


விஜயகாந்திடம் அதிமுகவுடன் கூட்டணி நீடிக்குமா? என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்து நழுவினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் கடந்த 11&ந் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூடு மற்றும் போலீஸ் தடியடியில் காயமடைந்த 18 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை நேற்று காலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பார்த்து ஆறுதல் கூறினார். நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதி உதவி மற்றும் ஹார்லிக்ஸ், பழங்கள் வழங்கினார். அப்போது துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் என நினைத்து வேறு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் விஜயகாந்த் நிதியை வழங்கினார். இதை அருகில் நின்ற கட்சி நிர்வாகி திருப்பி வாங்க முற்பட்டார். இதை கவனித்த விஜயகாந்த் கொடுத்ததை வாங்க வேண்டாம், அவருக்கு உதவியாக அந்த நிதி இருக்கட்டும்’’ என்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் மேயர், நகராட்சி தலைவர் வேட்பாளர்களை அ.தி.மு.க. தன்னிச்சையாக அறிவித்துள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்குமா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு விஜயகாந்த் சொந்த வேலையாக மதுரை வந்தேன். 8.30 மணி விமானத்திற்கு சென்னை செல்கிறேன். அதற்கு முன்னதாக துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற வந்தேன். அதைப்பற்றி மட்டும் கேளுங்கள், அரசியல் குறித்து கேட்காதீர்கள். அரசியல் பேச வேண்டாம்’’ என்றார். தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி தொடர்பான எந்த கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து நழுவினார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...