மூன்றாம் கண்.,: தயாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை

Pages

Wednesday, September 14, 2011

தயாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை


திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறனிடம்,

சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறையினர் இன்று புதன்கிழமை விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2004 முதல் 2007 வரை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தார் தயாநிதி. அப்போது, ஏர்செல் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு உரிமம் வழங்காமல் காலதாமதம் செய்ததாகவும், அந் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவருக்கு விற்குமாறு தன்னை நிர்பந்தப்படுத்தியதாகவும், அப்போதைய ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் சிபிஐ-யிடம் புகார் செய்தார். ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் என்ற மலேசிய நிறுவனத்துக்கு விற்றவுடன், அதன் விரிவாக்க சேவைக்கான உரிமம் உடனடியாக வழங்கப்பட்டதாகவும் சிவசங்கரன் புகார் கூறினார்.ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய மலேசிய நிறுவனம், அதற்குக் கைமாறாக சன் டி.வி. குழுமத்தில் 800 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் புகார் கூறப்பட்டது.தயாநிதி மாறன், சிவசங்கரனுக்கு அழுத்தம் கொடுத்ததாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது. பின்னர், அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்றும், தொடர்ந்து விசாரிப்பதாகவும் கூறியது.இதனிடயை, தயாநிதி மாறனிடம் இன்று டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தி, அந்தப் புகார் தொடர்பாக பல்வேறு விவரங்களைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தன் மீதான புகார்களை தயாநிதி மாறன் மறுத்ததாகக் கூறப்படுகிறது.தயாநிதியின் சகோதரரும், சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறனிடம் சிபிஐ அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...