மூன்றாம் கண்.,: சோனியாவை டி.ஆர்.பாலு சந்தித்தது ஏன்? கருணாநிதி

Pages

Saturday, September 24, 2011

சோனியாவை டி.ஆர்.பாலு சந்தித்தது ஏன்? கருணாநிதி


""தமிழன் என்ற பண்பாட்டுடன் உடல் நலம் விசாரிக்கவே, சோனியாவை, டி.ஆர்.பாலு சந்தித்தார்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


இதுகுறித்து நேற்று அவர் அளித்த பேட்டி:
முன்னாள் அமைச்சர் சாமி கைது செய்யப்பட்டுள்ளாரே?
உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு அவர் பாடுபடுவார் என்பதற்காக, அவர் மீது, பொய்வழக்கு சுமத்தி கைது செய்துள்ளனர். என்றைக்கோ நடந்ததாக ஒரு குற்றத்தை சுமத்தி, அவரை அந்த பொய்வழக்கில் கைது செய்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் தனியாக போட்டியிடுவதைப் பற்றி?
இப்போது சொல்ல விரும்பவில்லை.சோனியாவை, டி.ஆர்.பாலு சந்தித்துள்ளாரே?
சோனியா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் தோழமை கட்சி, நட்புக்கட்சி என்ற முறையில், அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி, தந்தி கொடுத்தேன். பின், அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோதும் வாழ்த்து தெரிவித்தேன். தற்போது நலம் பெற்று திரும்பியிருக்கிறார். எனவே, தமிழன் என்ற முறையில், அந்த பண்பாட்டுடன் அவரது உடல்நலம் விசாரிக்க, டி.ஆர்.பாலுவை அனுப்பியிருந்தேன்.
எப்போது தேர்தல் பிரசாரம்?
முடிவு செய்தவுடன் அறிக்கை கொடுப்போம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...