மூன்றாம் கண்.,: பிரதமர், அமைச்சர்களின் சொத்து விவரம் வெளியீடு

Pages

Saturday, September 3, 2011

பிரதமர், அமைச்சர்களின் சொத்து விவரம் வெளியீடு




பிரதமர் மன்மோகன் சிங், அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 77 அமைச்சர்களின் சொத்து விவரங்கள், பிரதமர் அலுவலக இணையத்தளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மிக அதிகமான சொத்துடையவராக, முன்பு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பிரபுல் பட்டேல் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.33 கோடியாகும். மிக குறைந்த  சொத்து மதிப்பு உடையவர், முன்பு இரயில்வே அமைச்சராக இருந்தவரும், தற்போது மேற்கு வங்க முதல்வராக இருப்பவருமான மம்தா பானர்ஜி ஆவார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.6.7 இலட்சம். இதில் 10 கிராம் தங்கமும் அடக்கம். தனது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் தங்களுடைய சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியதன் அடிப்படையில், மத்திய அமைச்சரவைச் செயலராக இருந்து ஓய்வு பெற்ற கே.எம்.சந்திரசேகர், இந்த தகவல்களை அமைச்சர்களிடம் இருந்து பெற்று வெளியிட்டுள்ளார்.  பிரதமர் மன்மோகன் சிங், தனக்கு சண்டிகரில் 4,500 சதுர அடியில் இரண்டு அடுக்கு மாடி வீடு உள்ளதென்றும், அதனைத் தான் 1987இல் ரூ.8,62,000 வாங்கியதாகவும், அதனை 1997-98இல் ரூ.8.45 இலட்சம் செலவு செய்து கட்டியுள்ளதாகவும், அதன் தற்போதைய சந்தை மதிப்பு அ.90 இலட்சம் என்றும் கூறியுள்ளார். இதேபோல் புதுடெல்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பில் ஒரு வீட்டை 1991இல் ரூ.4,18,000 வாங்கியதாகவும், அதன் தற்போதைய மதிப்பு ரூ,88,67,000 என்றும் கூறியுள்ளார். இவைகள் மட்டுமின்றி, பாரத அரசு வங்கிகளின் கணக்குகளிலும், வைப்பு நிதிகளிலும் வைத்துள்ள ரூ.3,21,93,471 கணக்குகள் விவரங்களையும் வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக பிரதமரின் சொத்துக்கள் மதிப்பு 4.8 கோடியாகிறது. இதேபோல் முழுமையான விவரங்களுடன் மற்ற அமைச்சர்களின் சொத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...