மூன்றாம் கண்.,: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: சிறுவன் பலி

Pages

Tuesday, September 6, 2011

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: சிறுவன் பலி


இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு ஒரு சிறுவன் பலியானான்.
இந்தோனேனியாவில் வடக்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மேடான் நகரம் அதிர்ந்தது. இதைத் தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓடினார்கள். சிறிது நேரம் அங்கு தங்கி இருந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார்கள். இதற்கிடையே நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகி இருப்பதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 110 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக வழக்கத்தை விட கடலில் உயரமான அலைகள் எழும்பின. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட வில்லை. ஆனால் மேடான நகரில் சில வீடுகள் இடிந்தன. மேலும் பல கட்டிடங்களில் விரிசல்களும், கீறல்களும் ஏற்பட்டன. வீடு இடிந்ததில் 12 வயது சிறுவன் ஒருவன் பலியானான். மற்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மீட்பு பணி நடைபெறுகிறது. இந்த தகவலை மேடான் நகர மேயர் கவுலங்காம் தெரிவித்துள்ளார். இந்தோனேனியா பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்ப அபாய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பமும், எரிமலை வெடிப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன. முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு சுமித்ரா தீவில் 9.9 நிலநடுக்கம் ஏற்பட்டு 2,20,000 மேற்பட்ட மக்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...