மூன்றாம் கண்.,: எஸ்பிபி சரண் முன்ஜாமீன் மனுதாக்கல்

Pages

Monday, September 19, 2011

எஸ்பிபி சரண் முன்ஜாமீன் மனுதாக்கல்


நடிகை சோனாவின் பாலியல் புகாரில் கைதைத் தவிர்க்க தயாரிப்பாளர் எஸ்பிபி சரண் இன்று முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
கவர்ச்சி நடிகை சோனா பாண்டி பஜார் போலீசில் தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். "மது விருந்தில் தனது கையை பிடித்து சரண் இழுத்தார். மானபங்கம் செய்தார். இரவு தன்னுடன் தங்கும்படி நிர்ப்பந்தம் செய்தார்", என்று சோனா தனது புகாரில் தெரிவித்தார்.இப்புகார் தொடர்பாக எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.மது விருந்தில் பங்கேற்ற அனைவரிடமும் விசாரணை நடத்தி சம்பவம் உண்மையாக இருந்தால் எஸ்.பி.பி.சரண் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து எஸ்.பி. பி.சரண் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்தார்.சோனா குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் சரண் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த வழக்கை நீதிபதி ராஜசூர்யா விசாரிக்கிறார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...