மூன்றாம் கண்.,: திப்பு சுல்தானாக கமல்ஹாசன் : புதிய மலையாள சரித்திர படம்

Pages

Sunday, September 4, 2011

திப்பு சுல்தானாக கமல்ஹாசன் : புதிய மலையாள சரித்திர படம்


மாவீரன் நெப்போலியனின் அறிவிக்கப்படாத இந்திய பிரதிநிதியாகவே செயற்பட்ட மாமன்னர் திப்பு சுல்தானையும், அவரது மகாராணியாரையும் (உன்னியார்ச்சா) மையப்படுத்தி திரைக்கதை தயாராகிவிட்டது.
நேற்று இதற்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு திருவனந்தபுரத்தில் வெளியிடப்பட்டது. படத்தின் திரைக்கதையை ஜான்பால் எழுதியுள்ளார். வயலார் மாதவன் இயக்குகிறார். பழசிராஜா எனும் ஆங்கிலேயர் காலத்து வரலாற்று கதையை திரைப்படமாக்கி மாபெரும் வெற்றியை கொடுத்த கோகுலம் கோபாலன் இப்படத்தினையும் தயாரிக்கிறார். கதையை எழுதும் போதே திப்பு சுல்தான் கேரக்டருக்கு கமல் தான் பொருத்தமானவர் என்று உணர்ந்தோம். அவர் தோற்றம் கம்பீரமாக இருக்கும் என உணர்ந்தோம். யுத்தம், சுதந்திர போராட்டம், காதல் போன்ற அனைத்து அம்சங்களும் இருக்கும் என்கிறார் ஜான் போல். திப்பு சுல்தான் வேடத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றதும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். கமலிடம் நான்கு மாதம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்களாம். 18ம் நூற்றாண்டு காலக்கதை. கமல் நடிப்பதால் தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் படம் வெளிவரவிருக்கிறது. வடக்கு மலபார் பகுதியை ஆட்சி செலுத்திய உன்னியார்ச்சா பெரிய வீராங்கணை, திப்பு சுல்தான் மற்றும் உன்னியர்ச்சா தொடர்புடைய காட்சிகளை மட்டும் தான் படமாக்குகிறார்களாம்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னதாகத்தான் நட்புக்காக நடிகர் ஜெயராமுடன் ஃபோர் பிரெண்ட்ஸ் படத்தில் நடித்து கொடுத்திருந்தார். இப்பொது மீண்டும் மலையாளப்பக்கம் திரும்பியுள்ளார். கமல் தற்சமயம் தானே இயக்கி நடிக்கும் விஸ்வ ரூபத்தில் பிஸியாக இருக்கிறார். இதோடு விரைவில் 'நண்பர்களும், 40 திருடர்களும்' தயாராகும் என்கிறார்கள். அதற்கு கமல் சுல்தானாகவும் வலம் வரவிருப்பது கமல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...