மூன்றாம் கண்.,: செருப்பு வாங்க தனி விமானம்! மாயாவதி விக்கிலீக்ஸ்

Pages

Tuesday, September 6, 2011

செருப்பு வாங்க தனி விமானம்! மாயாவதி விக்கிலீக்ஸ்


உத்திரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட தகவல்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால்,
அதனை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரியிடம் பேசி தீர்த்துக்கொள்ளலம் என விக்கிலீக்ஸ் உரிமையாளர் அசாஞ்சே கூறியுள்ளார். விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்காக அசாஞ்சேவை, மனநல காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்ததற்கு பதில் அளிக்கும் விதமாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பகுத்தறிய கூடிய வகையில் இல்லாமல் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் மாயாவதி கருத்துக்களை வெளியிட்டு வருவதால், அவர் மக்களையும் ஏமாற்றி வருகிறாரா என்ற கேள்வி எழுகிறது என்று அசாஞ்சே குறிப்பிட்டுள்ளார். மாயவாது பற்றி குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அமெரிக்க தூதர்கள், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரியிடம் தனிப்பட்ட முறையில் பேசியபோது என்று தெரிவிக்கப்பட்டது என்றும் அதன் நம்பகத்தன்மையில் சந்தேகம் இருந்தால் ஹிலாரியிடம் கேட்டுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மாயாவதி தனது தவறுகளை உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இங்கிலாந்து தனி விமானம் அனுப்பி என்னை அழைத்துச் செல்லலாம் என்றும், நான் விரும்பும் இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கிûப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான் என்றும் அசாஞ்சே கூறியுள்ளார். அரசுப்பணத்தில் மாநிலம் முழுவதும் தனக்கு சிலை வைக்க உத்தரவிட்டு சர்ச்சையை கிளப்பினார் உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி. அரசு உயர் அதிகாரியை தனது ஷூவை கர்ச்சிப்பால் துடைக்கவிட்டு சர்ச்சையில் சிக்கினார். மேலும் பல சர்ச்சைகளில் சிக்கிய இந்த சர்ச்சை ராணி, மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்குகிறார்.  விக்கிலீக்ஸ் இணையதளம் இது குறித்த ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. "புதிதாக காலணி வாங்க வேண்டுமானால் தனது ஜெட் விமானத்தை மும்பைக்கு அனுப்பி விருப்பப்பட்டவற்றை மாயாவதி வாங்கி கொள்வார். மேலும் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காகவே 9 சமையல்க்காரர்கள் மற்றும் 2 சுவை அறிபவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார். இத்தகவல் அக்டோபர் 23, 2008 தேதியில் பதிவாகியுள்ளது. அதே போன்று, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது, கட்சி உறுப்பினர்கள், அரசு துறை ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரிடமிருந்து கோடிக்கணக்கில் பரிசு பொருட்களை பெற்றுக்கொள்வது வழக்கம்" என்ற தகவலையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...