மூன்றாம் கண்.,: அசாருதீன் மகன் மரணம்

Pages

Friday, September 16, 2011

அசாருதீன் மகன் மரணம்


முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் மகன் அயாஸýதீன் (19) வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மொராதாபாத் தொகுதி மக்களவை உறுப்பினருமான முகமது அசாருதீனின் மகன் அயாஸýதீன், கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலைவிபத்தில் படுகாயமடைந்தார். தனது உறவினர் அஜ்மல்-உர்-ரஹ்மானுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயமேற்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில், அஜ்மல் சில மணி நேரங்களிலேயே காயம் காரணமாக உயிரிழந்தார். கடந்த 5 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அயாஸýதினின் மூளை, வியாழக்கிழமை ஆக்ஸிஜன் குறைவால் செயலிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் அயாஸýதினின் உயிர் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நிர்வாகி டாக்டர். ஹரி பிரசாத் அறிவித்தார். ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி அமைச்சர்களுடன் மருத்துவமனைக்குச் சென்று அயாஸýதீனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...