மூன்றாம் கண்.,: அதிமுக கூட்டணி உடைந்தது; தேமுதிக தனித்து போட்டி

Pages

Friday, September 23, 2011

அதிமுக கூட்டணி உடைந்தது; தேமுதிக தனித்து போட்டி


அதிமுக கூட்டணி உடைந்தது;  தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. பட்டியலை விஜயகாந்த்  நேற்று வெளியிட்டார்.  கூட்டணி  கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த
ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நந்தம் விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட குழுவை அதிமுக அமைத்தது.  இந்தக் குழுவுடன் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தின. தேமுதிகவும் வரவில்லை; அதனுடன் அதிமுக குழுவும் பேச்சு நடத்தவில்லை.  தேமுதிக தங்களுக்கு 4 மேயர் தொகுதியும், உள்ளாட்சிகளில் 40 சதவீதமும் வேண்டும் என்று கேட்டு வந்தனர். ஆனால் அதிமுக தரப்பிலோ, ஒரு மேயர் தொகுதி மற்றும் 10 சதவீத இடங்களே ஒதுக்க முடியும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இரு கட்சிகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசாமலேயே இருந்து வந்தனர். இந்தநிலையில், அதிமுக 10 மேயர் வேட்பாளர்களை தன்னிச்சையாக  அறிவித்தது. அதன்பின், தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்கள் பதவிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. இதுவரை 7 பட்டியல்களை வெளியிட்டுள்ளது. இதனால் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடம் கிடைக்குமா? அல்லது அதிமுக கொடுக்கும் இடங்களை வாங்கிக் கொண்டு பேசாமல் ஒதுங்கி விடுவார்களா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். அதில் பெரும்பாலானவர்கள் தனித்துப் பேட்டியிட வேண்டும் என்று கூறி வந்தனர்.
ஒரு பக்கம் அதிமுக தரப்பில் இருந்து இத்தனை நாளும் பதில் இல்லாததுடன், பட்டியல்களையும் தன்னிச்சையாக அறிவிப்பது தொடர்வதால், உதாசீனப்படுத்துவதாக விஜயகாந்த் உணர்ந்தார்.  இந்த நிலையில், நேற்று தன் கட்சி பட்டியலை வெளியிட்டார்.  தேர்தல் நடைபெறும் 9 மாநகராட்சி மேயர், 39 நகராட்சி தலைவர் வேட்பாளர்களை நேற்று அறிவித்தார். சென்னை&வேல்முருகன்(தொழிற்சங்கத் தலைவர்),
மதுரை&கா.கவியரசு(மதுரை மாநகர் மாவட்ட அவைத்தலைவர்)
கோயம்புத்தூர்&ஆர்.பாண்டியன்(கோவை வடக்கு மாவட்டச் செயலாளர்)
சேலம்&ஏ.ஆர்.இளங்கோவன்(மாநில துணை செயலாளர்)
திருநெல்வேலி&ஏ.சீதாலட்சுமி
வேலூர்&எஸ்.சத்தியவாணி சுரேஷ் பாபு
ஈரோடு&என்.எஸ்.சிவக்குமார்(தெற்கு மாவட்ட செயலாளர்)
திருப்பூர்&தினேஷ்குமார்(வடக்கு மாவட்டச் செயலாளர்)
தூத்துக்குடி & எஸ். ராஜேஸ்வரி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து 23 நகராட்சித் தலைவர்களுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். மற்ற பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என்று தேமுதிக அறிவித்துள்ளது. இந்தநிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் இப்போது பதவிகளில் உள்ள இடங்களை மீண்டும் ஒதுக்க வேண்டும்.
அதைத் தவிர வேறு சில இடங்களையும் தர வேண்டும் என்று பட்டியலைக் கொடுத்துள்ளனர்.   ஆனால் அதிமுக தலைமை இதுவரை அவர்களுக்கான முடிவுகளை அறிவிக்கவில்லை. இதனால் இன்று இரு கட்சிகளும் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்கின்றனர். அதிமுக தலைமை அதற்குள் தங்களுக்கு இடங்களை ஒதுக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அவ்வாறு ஒதுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை மாநிலக்குழுவுடன் ஆலோசித்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கம்யூ னிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர். தேமுதிகவும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால், தமிழகம் முழுவதும் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, மதிமுக, பாஜக ஆகிய 7 முக்கிய அரசியல் கட்சிகள் தனித்தனியாக உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கின்றன. சிறு கட்சிகளான புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகளும் தனித்தனியாக தேர்தலைச் சந்திக்கின்றன. கம்யூனிஸ்ட்களின் நிலை மட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளன.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...