மூன்றாம் கண்.,: மன்மோகன் சிங் கண் தானம்

Pages

Friday, September 9, 2011

மன்மோகன் சிங் கண் தானம்


தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் ஆகியோர் கண் தானம் செய்துள்ளனர்.
'உலகில் 28.40 கோடி மக்கள் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளனர்' என்று உலக சுகாதார நிறுவனம் புள்ளிவிவரம் வெளியிட்டது. பார்வை இல்லாதவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் உலகில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கண் பாதுகாப்பு மற்றும் கண் தானம் குறித்த வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரது மனைவி குர்சரண் கவுரும் தங்கள் கண்களை தானம் தர முன் வந்துள்ளனர். கண் தான விண்ணப்பத்தில் இருவரும் கையெழுத்து போட்டு ஒப்புதல் அளித்துள்ளனர் என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...