மூன்றாம் கண்.,: 2014 தேர்தல்:மோடி - ராகுல் இடையேதான் போட்டி அமெரிக்கா

Pages

Wednesday, September 14, 2011

2014 தேர்தல்:மோடி - ராகுல் இடையேதான் போட்டி அமெரிக்கா


வருகிற 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்பிரதமர் பதவிக்கான போட்டி குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும்,
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்குமிடையேதான் இருக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு சேவை (Congressional Research Service -CRS) சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக மோடிதான் களமிறக்கப்படுவார். அதே சமயம் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியை நிறுத்துவதற்கான ஆலோசனை அக்கட்சியில் அதிகரித்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு சேவை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான ஆய்வு அமைப்பு ஆகும்.
இந்த அமைப்பு இந்தியாவின் சர்வதேச அரசியல் பரிமாணங்களை விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை கடந்த 1 ஆம் தேதியன்று சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அந்த அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல் இடம் பெற்றுள்ளது.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...