மூன்றாம் கண்.,: மாறன் மீது விரைவில் எப்ஐஆர்

Pages

Thursday, September 29, 2011

மாறன் மீது விரைவில் எப்ஐஆர்


2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது விரைவில் முதல் தகவல் அறிக்கை பதிவு (எஃப்.ஐ.ஆர்.) செய்யப்படுமென்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரி வித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது "ஏர்செல்' நிறுவனத் துக்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டார் என்பது உள்பட அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டு களுக்கு ஆதாரங்கள் சிபிஐ வசம் உள்ளதாகத் தெரிகிறது. 2ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்தவழக்கின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பான புதிய விசாரணை நிலை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசா ரித்து வரும் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்விடம் அறிக்கை அளிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குறைஞர் கே.கே.வேணு கோபால் அப்போது கூறியதாவது: இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு உள்ள தொடர்பு குறித்த முதல்நிலை விசாரணை முடிந்து விட்டது. அடுத்த சில நாள்களில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் படும். இதே வழக்கில் "எஸ்ஸார்' நிறு வனத்தின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது முடிய இன்னும் 2 வார காலம் ஆகும்.வழக்கில் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றார்."ஏர்செல்' நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான சிவசங்கரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மத்திய அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், நியாயமற்ற வகையில் பாரபட்சமாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. நெருக்குதல் காரணமாக மலேசி யாவின் "மேக்லிஸ்' நிறுவனத்துக்கு "ஏர்செல்' விற்கப்பட் டுள்ளது. இதில் ரூ.549 கோடி கைமாறியுள்ளது என்று கூறினர். ஆனால் இது தொடர்பான முழு விவரங்களை வேணுகோபால் கூறவில்லை. "மேக்ஸிஸ்' நிறுவனம் மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் குழுமத்தில் முதலீடு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ளது. ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரத்தில் தயாநிதியின் பங்கு குறித்து அப்பல்லோ மருத்துவமனை இயக்குனர் சுனிதா ரெட்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டது என்றும் வழக்குரைஞர் வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரரிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய பிற நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதால் 3வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.முன்னதாக காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் முறையாக மத்தியில் 2004ல் ஆட்சி அமைத்தபோது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் பதவி வகித்தார். 2007 வரை அவர் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத் துக்கு நெருக்குதல் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இப்புகாரை அடுத்து "ஏர்செல்' நிறுவனர் சிவசங்கரனிடம் சிபிஐ விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது. அதில் தயாநிதிமாறன் தமக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு தராமல் சுமார் இரண்டு ஆண்டு காலம் இழுத்தடித்தார் என்றும், அதன் காரணமாக "ஏர்செல்' நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த "மேக்ஸிஸ்' நிறுவனத்திடம் விற்க வேண்டியதாயிற்று என்றும் சிவங்கரன் கூறியிருந்தார். மலேசிய நிறுவனத்தின் கைக்கு "ஏர்செல்' மாறிய 30வது நாளில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன் பின், சன் குழுமத்தின் சன் டி.டி.எச். நிறுவனத்தில், மேக்ஸிஸ் துணை நிறுவனமான அஸ்ட்ரோ ரூ.600 கோடியை முதலீடு செய்திருந்தது. இதையடுத்து 2ஜி ஊழலில் தயாநிதிக்கும் தொடர்பு உண்டு என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கூறியது. இதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் ஜவுளித்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் கடந்த ஜூலை 7ம் தேதி பதவி விலகினார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...