மூன்றாம் கண்.,: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: முன்னணி நடிகர்கள் வரவில்லை

Pages

Sunday, September 11, 2011

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: முன்னணி நடிகர்கள் வரவில்லை


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. புதுமுக நடிகர், நடிகைகள் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமலேயே திரைப்படங்களி்ல் நடித்து வருகின்றனர்.
இந்தப் போக்கு நீண்ட காலமாகவே தொடர்கிறது. இதையடுத்து செப்டம்பர் 30ம் தேதி வரை அவர்களுக்கு அவகாசம் தரப்படுகிறது. இந்தக் கால கட்டத்திற்குள் புதுமுக நடிகர் நடிகைகள், சங்க உறுப்பினராகி விட வேண்டும். இல்லையென்றால் தமிழ்ப் படங்களில் நடிக்க அவர்களுக்கு ஒத்துழைப்பு தரப்பட மாட்டாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல, பெப்சி அமைப்புடன் நிலவி வரும் பூசல் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வலியுறுத்தியும் ஒரு தீர்மானம் போடப்பட்டது. நடிகர் சங்கத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கில்தான் கூட்டம் வழக்கமாக நடைபெறும். ஆனால் அங்கு கட்டுமானப் பணிகள் நடப்பதால் இன்றைய கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்தது. நடிகர் சங்க கூட்டங்களுக்குப் பொதுவாக நடிகர், நடிகைகள் அதிக அளவில் வருவதில்லை, ஆர்வமும் காட்டுவதில்லை. சாதாரண கூட்டமாக இருந்தாலும் சரி, மிக முக்கியமான கூட்டமாக இருந்தாலும் சரி முன்னணி நடிகர்கள் வருவதில்லை.அதே நிலை தான் இன்றும் முன்னணி நடிகரோ, நடிகையோ யாரும் கூட்டத்திற்கு வரவில்லை

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...