மூன்றாம் கண்.,: சச்சின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி.

Pages

Wednesday, September 21, 2011

சச்சின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி.


ஒருநாள் போட்டியில் எவ்வித மாற்றமும் கொண்டு வரப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமைச் செயல் அதிகாரி ஹாரூன் லோர்கட் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஒருநாள் போட்டியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லோர்கட் மேலும் கூறியிருப்பது: ஒருநாள் போட்டியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. சச்சின் அனுப்பிய கருத்துருக்கள் நீண்ட நாள்களுக்கு முன்பே எனக்கு கிடைத்தது. இதுதொடர்பாக அவரிடம் பலமுறை விவாதித்து இருக்கிறேன். சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையின்போதுகூட இதுகுறித்து விவாதித்தேன். உலகக் கோப்பை போட்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது ஒருநாள் போட்டி நல்ல நிலையில் உள்ளதையே காட்டுகிறது. அதனால் மாற்றம் கொண்டுவர வேண்டிய தேவையில்லை. உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு நடைபெற்ற ஐசிசி செயற்குழு கூட்டத்தின்போது இப்போதுள்ள ஒருநாள் போட்டி நடைமுறை சிறப்பாக உள்ளதால் அதில் மாற்றம் கொண்டுவர தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டது என்றார். டி.ஆர்.எஸ். (கள நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்தல்) முறை குறித்துப் பேசிய அவர், இந்தியா விரும்பாவிட்டாலும் டி.ஆர்.எஸ். முறை சிறப்பானது என்பதே என்னுடைய எண்ணம். கிரிக்கெட் போட்டியில் சிறந்த நடுவர்கள்கூட 95 சதவீத அளவுக்குத்தான் துல்லியமான தீர்ப்பை வழங்குகின்றனர். 100 சதவீத அளவுக்கு சரியான தீர்ப்பை வழங்குவதில்லை. 100 சதவீத சரியான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் டிஆர்எஸ் முறை கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் இப்போது தீர்ப்புகளை வழங்குவதில் 1 சதவீத அளவில் தவறுகள் நிகழ்ந்தாலும் 5 சதவீத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம் என்றார் லோர்கட்.

முன்னதாக, இப்போது நடைமுறையில் உள்ள ஓர் இன்னிங்ஸýக்கு 50 ஓவர்கள் என்பதை மாற்றி ஓர் இன்னிங்ஸýக்கு 25 ஓவர்கள் என மொத்தம் 4 இன்னிங்ஸ்களைக் கொண்டதாக ஒருநாள் போட்டி இருக்க வேண்டும். இப்போது ஒரு பந்துவீச்சாளர் 10 ஓவர் வரை மட்டுமே பந்துவீச முடியும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றி 4 பந்துவீச்சாளர்களை 12 ஓவர்கள் வரை வீச அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துருக்களை முன்வைத்து லோர்கட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார் சச்சின்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...