மூன்றாம் கண்.,: July 2011

Pages

Sunday, July 31, 2011

காங்., கட்சியினருக்கு இன்னமும் வேண்டும் : சொல்கிறார் கருணாநிதி






ராஜா குற்றச்சாட்டுக்கு பிரதமரும், சோனியாவும் விளக்கம் அளிக்க வேண்டுமென ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றுகிறார். ஜெயலலிதா உறவுக்காக வாய்க்கு வந்தவாறு உளறிக்கொண்டிருக்கும், காங்., நண்பர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்,'' என கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கை * பழிவாங்கும் நோக்கோடு யாரையும் கைது செய்யவில்லை என ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

Share/Bookmark

திருவாரூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உரையாற்றுகிறார்


திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்ததைக் கண்டித்து,

Share/Bookmark

Saturday, July 30, 2011

மு.க.ஸ்டாலின் கைது பழிவாங்கும் நடவடிக்கை கருணாநிதி கண்டனம்


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது, பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share/Bookmark

திராவிட் 34-வது சதத்தை விளாசி சாதனை படைத்தார்




இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 85.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Share/Bookmark

Friday, July 29, 2011

வெளிநாட்டில் தனது 100வது டெஸ்ட் போட்டியை ஆடும் சச்சின்


லார்ட்ஸில் சதமடிப்பார். அது முடியவில்லையா, பரவாயில்லை டிரன்ட்பிரிட்ஜில் கண்டிப்பாக சத்தாய்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் சத்தம் போடாமல் சதம் போட்டுள்ளார் சச்சின். ஆமாம், டிரன்ட்பிரிட்ஜில் இன்று சச்சின் ஆடும் டெஸ்ட் போட்டி, வெளிநாடுகளில் அவர் பங்கேற்கும் 100வது போட்டியாகும்.

Share/Bookmark

தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கசாப் மனு


தூக்கு தண்டனையை எதிர்த்து பயங்கரவாதி அஜ்மல் கசாப், உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார்.

Share/Bookmark

ரூ. 20 கோடி வருவாய் ஈட்டிய தாஜ்மகால்

ஆக்ராவில் அமைந்துள்ள, காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகால், கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆக்ராவில் அமைந்துள்ள காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகால், மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

Share/Bookmark

Thursday, July 28, 2011

கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவனுக்கு வலைவீச்சு


திமுக தலைவர் கருணாநிதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஒரு செல்போனில் இருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியபோது மறுமுனையில் சிறுவன் குரல் கேட்டது.

Share/Bookmark

Wednesday, July 27, 2011

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி நீதிமன்றத்தில் ஆஜர்


 ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

Share/Bookmark

திமுக பாமக உறவு முறிந்தது


தமிழகத்தில் தி.மு.க உடனான தனது உறவை பா.மா.க முறித்துக் கொண்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி மு க கூட்டணியிலிருந்து விலகி அ இ அ தி மு க கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அந்தக் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அண்மையில் இடம் பெற்ற சட்டமன்ற தேர்தல்களின் போது மீண்டும் தி மு க கூட்டணியில் இணைந்து கொண்டது.

Share/Bookmark

Tuesday, July 26, 2011

இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 20 டி.வி.நடிகைகள் கைது




இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 20 -க்கு மேற்பட்ட டி.வி.நடிகைகளை ‌கொழும்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share/Bookmark

பிரதமரைக் குற்றம்சாட்டவில்லை:ஆ. ராசா

 2ஜி அலைக்கற்றை ஓதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கையும், அப்போதைய நிதி அமைச்சரான ப.சிதம்பரத்தையும் சேர்க்க தாம் முயல்வதாக வெளியான தகவல்கள் திரிக்கப்பட்டவை என மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார். நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அவரே நேரில் ஆஜராகி வாதாடினார்.

Share/Bookmark

Monday, July 25, 2011

ஜப்பான் பயங்கர நிலநடுக்கம்

இன்று வடகிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது.ஜப்பான் அடிக்கடி இயற்கை சீற்றத்தால்

Share/Bookmark

நடிகர் ரவிச்சந்திரன் மறைவு: கலைஞர்கள் இரங்கல்


பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மறைவுக்கு கலைஞர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன்.

Share/Bookmark

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு திருப்பதி கோயிலுக்குள் அனுமதி மறுப்பு


ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு திருப்பதி கோயிலுக்குள் அனுமதி மறுப்பு. நடிகர் ரஜினி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சமயத்தில் அவரது மகள் சவுந்தர்யா திருப்பதி ஏழுமலையானிடம் தனது தந்தை பூரண குணம் அடைய வேண்டி பிரார்த்தனை செய்தார்.

Share/Bookmark

Sunday, July 24, 2011

காய்ச்சலோடு விளையாடிய சச்சின்



இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், முதல் இன்னிங்ஸில் காய்ச்சலோடு பேட் செய்தது தெரியவந்துள்ளது.முதல் இன்னிங்ஸில் சுமார் ஒன்றரை பேட் செய்த சச்சின் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Share/Bookmark

உள்ளாட்சித் தேர்தலில் புலிகள் ஆதரவுக் கட்சியான, தமிழ் தேசியக் கூட்டணி அமோக வெற்றி

இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், விடுதலைப் புலிகள் ஆதரவுக் கட்சியான, தமிழ் தேசியக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

Share/Bookmark

Saturday, July 23, 2011

ஒரே ஹோட்டலில் கருணாநிதி, அழகிரி; மற்றொன்றில் தங்கினார் ஸ்டாலின்

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் தங்கியுள்ளனர். 

Share/Bookmark

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா?


இந்தியாவின் மிகப் பெரிய குடிமக்கள் விருதான பாரத் ரத்னாவை பெறுவதற்கான துறைகளின் பட்டியலில் விளையாட்டையும் சேர்க்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதால்,

Share/Bookmark

நார்வேயில் 80 பேர் சுட்டுக்கொலை




நார்வே தலைநகர் ஆஸ்லோவில் 7 பேரை பலிகொண்ட குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ௨ மணி நேரம் கழித்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 80 பேர் பலியானார்கள்.

Share/Bookmark

Friday, July 22, 2011

நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமான வரி ரெய்டு



கேரள முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்குச் சொந்தமான திருவனந்தபுரம், கொச்சி, சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் வருமான வரித்துறையினர்,

Share/Bookmark

Thursday, July 21, 2011

ஸ்டாலின் செயல்தலைவரா? பொதுக்குழு விவாதிக்கும்




தி.மு.க.வின் செயற்குழுவும், பொதுக்குழுவும் மிகுந்த பரபரப்புக்கு இடையே கோவையில் ஜூலை 23, 24-ம் தேதிகளில் கூடுகிறது. மு.க.ஸ்டாலினை கட்சியின் செயல்தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை அவருடைய ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பான விவாதம் தி.மு.க. தரப்பில் பல்வேறு ஆண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது என்றாலும் அண்மையில் மிக அதிகமாக அலசப்பட்டது. ஜூலை 2-ம் தேதி நடைபெற்ற இளைஞரணிக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் ஸ்டாலினைக் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இதுபோல் தமிழகம் எங்கும் தி.மு.க. சார்பில் பேசக்கூடியவராக ஸ்டாலின்தான் இருக்கிறார். அதனால் இந்தக் காலகட்டத்திலேயே ஸ்டாலின் தலைவரானால் எதிர்காலத்தில் எவ்வித இடரும் இருக்காது என்று கருதியதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்த தனது விருப்பத்தையும் ஸ்டாலின் கருணாநிதியிடம் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அறிவாலயத்திலிருந்து ஸ்டாலின் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது. அறிவாலயத்துக்கு அவர் சில நாள்கள் வராமல் இருந்தார். பிறகுதான் பல்வேறு வழக்குகளால் தி.மு.க. திணறிக் கொண்டிருக்கும்போது இப்படிக் கேட்கலாமா என்று தலைவர் கருணாநிதி அவரிடம் எடுத்துக் கூறி சமாதானப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. பொதுக்குழுவில்...: இருப்பினும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் இந்தப் பிரச்னை குறித்து பொதுக்குழுவில் பேசத் தயாராகி வருகின்றனர் என்று தெரிகிறது. தமிழகம் முழுவதும் சுற்றிப் பிரசாரம் செய்யக்கூடியவராக ஸ்டாலின்தான் இப்போது இருக்கிறார். அதனால் அவருக்கு அந்தப் பதவியை வழங்க வேண்டும் என்று கேட்க உள்ளனராம். இதை எதிர்த்துப் பேசவும் தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். ஸ்டாலின் தலைவர் ஆவதற்கு மு.க.அழகிரி மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தி.மு.க. மூத்த நிர்வாகிகள் பலரும் "கருணாநிதிதான் தி.மு.க.வின் வாக்குவங்கி. அவர் இருக்கும் வரை வேறு யார் தலைவராக அறிவிக்கப்பட்டாலும் தி.மு.க.வுக்குச் சரிவாக இருக்கும்' என்று கருதுகின்றனர். ஸ்டாலின் செயல் தலைவர் என்றால் கருணாநிதி செயல்படாத தலைவரா என்று கேள்வி எழுப்பி, இன்றைக்கும் கருணாநிதி அளவுக்குத் துரிதமாக யாராலும் செயல்பட முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். மக்களவைக் குழு: மாவட்டச் செயலாளர்களுக்குப் பதில் மக்களவைக் குழு அமைத்து அதன் கீழ் அவர்களைச் செயல்பட வைக்கலாமா என்று தி.மு.க. தலைமைக் கழகத்தால் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. இதில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் மாவட்டச் செயலாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. அதிக சட்டப் பேரவை தொகுதிகளைக் கொண்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் தங்கள் அதிகாரங்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இதனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தலைமைக்குக் கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் சட்டப் பேரவைத் தொகுதிகள் குறைவாக உள்ள மாவட்டச் செயலாளர்கள் மக்களவைக் குழுவின் கீழ் செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். வீரபாண்டி ஆறுமுகம் போன்ற மூத்த தலைவர்கள் இந்த மாற்றத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக தி.மு.க. முக்கியத் தலைவர் ஒருவர், "மாவட்டச் செயலாளர்களிடம் தலைமை கருத்துதான் கேட்டுள்ளது. தீர்மானமாகச் சொல்லவில்லை. எனவே பழைய முறைப்படி மாவட்டச் செயலாளர் தலைமையின் கீழே செயல்படலாம்' என்றுதான் அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்.  கருத்து வேறுபாடு: சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. தோல்விக்குச் சொல்லப்படும் முக்கியமான காரணங்களில் ஒன்று தி.மு.க. நிர்வாகிகளிடையே உள்ள ஒற்றுமைக் குறைவுதான் என்ற கருத்து நிலவுகிறது. இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. "நமது ஒற்றுமைக் குறைவைப் பயன்படுத்தி அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இப்போது நிலப் பறிப்பு வழக்கு போன்றவற்றை தி.மு.க.வினர் மீது போடுவதற்கும் இதுதான் காரணம். தி.மு.க.வினர் இடையே ஒற்றுமை இல்லை. இதனாலேயே நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்' என்று தி.மு.க. தலைமையால் பொதுக்குழு உறுப்பினர்களிடம் உணர்த்தத் திட்டமிட்டு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.






Share/Bookmark

லஞ்சம்:2 மாஜி மேயர்களுக்கு மரண தண்டனை



சீனாவின் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு குற்றம் நிரூபணமானதால் இரு முன்னாள் மாநகராட்சி மேயர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது., ஜியாங்ரென்ஜீ ஆகியோர் தங்களது பதவி காலத்தின் போது லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜூமையோங் 145 மில்லியன் யுவான் (22.02 டாலர்) லஞ்சமும், ஜியாங்ரென்ஜீ53.59 மில்லியன் யுவான் லஞ்சம் பெற்றது நிரூபணமானது. இந்த லஞ்சம் பண‌த்தை ரியல் எஸ்டேட் உரிமையாளர் களிடமிருந்து ‌வாங்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இவர்களுக்கு சீன கோர்ட் மரண தண்டனை விதித்த தீர்ப்பளித்தத. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Share/Bookmark

காஷ்மீர் பிரிவினைவாதிஅமெரிக்காவில் கைது


பாக். ஐ.எஸ்.ஐ.யிடம் பயிற்சி பெற்ற காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவரும், அமெரிக்க காஷ்மீர் கவுன்சில் இயக்குனருமான அமெரிக்காவைச் சேர்ந்த குலாம் நபி ஃபாய்(62) , என்பவரை அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர். ஆஜர்படுத் தப்பட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த குலாம்நபிஃபாய். அங்கு காஷ்மீர் அமெரிக்க கவுன்சில்(கே.ஏ.சி) அமைப்பின் இயக்குனராக இருந்தார். முன்னதாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யிடம் நான்கு வெவ்வேறு பெயர்களில் போலியாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு பயிற்சி பெற்றார். இவரை அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் வைத்து எப்.பி.ஐ. அமைப்பினர் கைது செய்தனர். இவர் மீது 43 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுளளது. இதில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 4 ஆயிரம் முறை ஐ.எஸ்.ஐ.யிடம் தொடர்புகொண்டுள்ளதாகவும், 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 2 ஆயிரம் முறை தொடர்பு கொண்டிருந்ததாகவும், எப்.பி.ஐ என்ற அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக குலாம்நபி-பை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை இன்று கோர்டில் தாக்கல் செய்கின்றனர். அமெரிக்காவில் இருந்‌து கொண்டே, ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் அமெரிக்க காஷ்மீர் கவுன்சில் இயக்குனராகவும் இருந்து கொண்டு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார். மேலும் இவர் நடத்திய பல்வேறு ரகசிய கூட்டங்களுக்கு ,காஷ்மீரின் ஹூரியத் மாநாட்டு கட்சியின் ‌தலைவர் மிர்வாஸ்-ஒமர் பரூக் கலந்து கொண்டுள்ளார் என்பதும் பாகிஸ்தான் அரசிடமிருந்து கடந்த 2003-ம் ஆண்டு முதல்2006-ம் வரை தனது காஷ்மீர் அமெரிக்கன் கவுன்சில் அமைப்பிற்கு 4 மில்லியன் டாலர் வரை ‌நன்கொடையாக பெற்று வந்ததாக எப்.பி.ஐ. அமைப்பினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் குலாம்நபி-பை ,ஒரு சமூக ஆர்வலர் என இந்தியாவைச் சேர்ந்த சில அமைப்புகள் கூறி வருகின்றன.

Share/Bookmark

Wednesday, July 20, 2011

சச்சினை 100-வது சதமடிக்க விடமாட்டோம்: இங்கிலாந்து




இங்கிலாந்து தொடரில் சச்சினை 100-வது சர்வதேச சதமடிக்கவிட மாட்டோம் என்று இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

Share/Bookmark

இறங்கும்போது டயர் வெடிப்பு: ஏர் இந்தியா விமானம் தப்பியது



டயர் வெடித்ததால் ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி நீண்டதூரம் ஓடியது. இந்திய விமானப்படையின் பராமரிப்பில் இருக்கும் கான்பூர் விமான நிலையத்தில் புதன்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது.

Share/Bookmark

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு


அங்கம்மாள் காலனி நிலப்பறி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 13 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Share/Bookmark

Tuesday, July 19, 2011

கடனை அடைத்தால்தான் இனி கச்சா! - இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை


இந்தியாவின் எண்ணெய்த் தேவையை பெரிதும் பூர்த்தி செய்யும் நாடுகளில் முதன்மையாக உள்ள ஈரான், இனி இந்தியாவுக்கு கடனாக எண்ணெய் தர முடியாது என கறாராக கூறிவிட்டது.

Share/Bookmark

ஆந்திராவில் உலகின் ஆக பெரிய யுரேனிய சுரங்கம் கண்டுபிடிப்பு



ஆந்திர மாநிலத்தில் துலப்பள்ளி அருகே யுரேனிய சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share/Bookmark

சன், "டிவி' மீதான புகார்களை விசாரிக்க தனிப் பிரிவு



நித்யானந்தா சீடர்கள், நடிகை ரஞ்சிதா ஆகியோர், சன், "டிவி' மீது கொடுத்த புகார்கள், நித்யானந்தா மீது கொடுக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரிக்க, தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக,

Share/Bookmark

Monday, July 18, 2011

சோனியா படத்துக்கு தீவைப்பு: தங்கபாலு கண்டனம்


காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்த பேனருக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்துக்கு அக்கட்சியின் தமிழகத் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

Share/Bookmark

காஞ்சி மடாதிபதிகள் நீதிமன்றில் ஆஜர்


காஞ்சிபுரம் வரதாரஜப் பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பில், காஞ்சி மடாதிபதிகள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட

Share/Bookmark

இ‌ன்று இ‌ந்‌‌தியா வரு‌கிறா‌ர் ஹிலாரி கிளிண்டன்




2 நா‌ள் பயணமாக அமெரிக்க அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் ஹிலாரி கிளிண்டன் இன்று டெல்லி வருகிறார்.

Share/Bookmark

Sunday, July 17, 2011

உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா? அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்



சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதா என்று கூறி அமெரிக்க நாட்டின் தூதரை அழைத்து சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.

Share/Bookmark

விசாரணை முடிந்தது சன் பிக்சர்ஸ் சக்சேனா சிறையில் அடைப்பு



மாப்பிள்ளை' பட வினியோக விவகாரத்தில் கைதான, "சன் பிக்சர்ஸ்' சக்சேனாவிடம் இரண்டு நாள் விசாரணை முடிந்ததை அடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் செல்வராஜ்,

Share/Bookmark

இந்தியர்களின் பணம் 11,500 கோடி ரூபாய்: சுவிஸ் மத்திய வங்கி அறிவிப்பு



சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் உள்ளது' என, அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.சுவிட்சர்லாந்து உட்பட அன்னிய நாட்டு வங்கிகளில்,

Share/Bookmark

Saturday, July 16, 2011

நடிக‌ர் ராம்கியும், நிரோஷா வீடுக‌ள் ஏலம்


வ‌ங்‌கிக‌ளி‌ல் வா‌ங்‌‌கிய பண‌த்தை செலு‌த்த தவ‌றியதா‌ல் நடிகை ‌நிரோஷா, நடிக‌ர் ‌ரா‌ம்‌கி ஆ‌கியோ‌ரி‌ன் ‌‌வீடுக‌ள் வரு‌ம் 18ஆ‌ம் தே‌தி ஏல‌த்‌‌தி‌ல் ‌விட‌‌ப்படு‌கிறது.

Share/Bookmark

ஒட்டிப்பிறந்த பெண் குழந்தைகள் மருத்துவமனைக்கே தானம்



மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதி, ஒட்டிப்பிறந்த தங்களது பெண் குழந்தைகளை, அவை பிறந்த கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனைக்கே தானமாக கொடுத்துள்ளனர்.

Share/Bookmark

"அட்டாக்' பாண்டி உட்பட 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு




மதுரையில் ஒத்தி வீட்டை அபகரிக்க, போலி பத்திரம் தயார் செய்ததாகக் கூறி, "அட்டாக்' பாண்டி உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரை சொக்கிக்குளத்தை சேர்ந்த ஈஸ்வரலால் மனைவி கல்பனா.

Share/Bookmark

ஸ்டாலினுடன் வாக்குவாதம்; கோபித்துக் கொண்டு கிளம்பிய கருணாநிதி!



திமுகவின் அடுத்த தலைவராக தம்மை அறிவிக்க வலியுறுத்தி மு.க. ஸ்டாலின் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கருணாநிதி கோபித்துக் கொண்டு மகாபலிபுரத்திற்கு சென்றதாக வெளியாகி உள்ள உடன்பிறப்புகளிடம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

Share/Bookmark

Friday, July 15, 2011

மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்



மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார்.

Share/Bookmark

ரூ. 32,000-க்கு "நானோ' வீடுகள்: டாடா குழுமம் திட்டம்


நானோ கார் வெற்றியைத் தொடர்ந்து குறைந்த விலையில் வீடுகளை கட்டி விற்பனை செய்ய டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

Share/Bookmark

நடிகர் வடிவேலு மீது மோசடி புகார்




4 ல‌ட்ச ரூபா‌ய் வா‌ங்‌கி‌க் கொ‌ண்டு மலேசிய நட்சத்திர கலைவிழாவுக்கு வராமல் ஏமாற்றியதாக நடிகர் வடிவேலு ‌மீது இணைதள ஆ‌சி‌ரிய‌ர் ஒருவ‌ர் செ‌ன்னை காவ‌ல்துறை ஆணைய‌ரி‌ட‌ம் புகா‌ர் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

Share/Bookmark

நித்தியானந்தா புகார் எதிரொலி- நக்கீரன் கோபால் முன்ஜாமீன் மனு தாக்கல்


நித்தியானந்தாவின் மேனேஜர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து நக்கீரன் ஆசிரியர் கோபால்,

Share/Bookmark

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்- கல்லூரி பேராசிரியர் கைது



முதலமைச்சர் ஜெயலலிதாவை வெடிகுண்டு வைத்து கொல்வோம் என்று செ‌ல்போ‌‌னி‌ல் தகவல் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

Share/Bookmark

Thursday, July 14, 2011

குண்டு வைத்தது யார்? : சிதம்பரம் பேட்டி



மும்பை குண்டு வெடிப்பு சம்பவம், உளவுத் துறையின் தோல்வியால் ஏற்பட்டது அல்ல. குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை விரைவில் பிடிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

Share/Bookmark

மும்பை குண்டுவெடிப்பு பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப் போர் எல்.கே.அத்வானி



மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப் போர் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குற்றம்சாட்டினார். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் சமரசம் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மும்பையில் மூன்று இடங்களில் புதன்கிழமை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை எல்.கே.அத்வானி வியாழக்கிழமை பார்வையிட்டார்.

Share/Bookmark

Wednesday, July 13, 2011

‌பயங்கரவாதத்தினை முறியடிக்க இந்தியாவிற்கு ஒத்துழைப்பு: ஒபாமா




மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

Share/Bookmark

அமெரிக்க விமானத் தாக்குதல் - பாகிஸ்தானில் 45 தீவிரவாதிகள் பலி



பாகிஸ்தானில் நேற்று முன்தினம் அமெரிக்கா நடத்திய நடத்திய விமானத் தாக்குதலில் சுமார் 45 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Share/Bookmark

மும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி; 113க்கும் மேற்பட்டோர் காயம்




மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 113 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்,

Share/Bookmark

Tuesday, July 12, 2011

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்



பிலிப்பைன்ஸ் நாட்டில், காலை நான்கு முறை, 5 முதல் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Share/Bookmark

கடைசி அமைச்சரவை மாற்றம்: மன்மோகன் சிங்



மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில்,2014 வரையிலான பதவி காலத்தில் இதுவே கடைசி அமைச்சரவை மாற்றம் என்று

Share/Bookmark

Monday, July 11, 2011

கலைஞர் டி.வி.க்கு பணம்: 19 நிறுவனங்கள் மீது விசாரணை



கலைஞர் டி.வி.க்கு பணம் அளித்தது தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த 19 போலி நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.

Share/Bookmark
Related Posts Plugin for WordPress, Blogger...