மூன்றாம் கண்.,: சச்சின் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா?

Pages

Saturday, July 23, 2011

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா?


இந்தியாவின் மிகப் பெரிய குடிமக்கள் விருதான பாரத் ரத்னாவை பெறுவதற்கான துறைகளின் பட்டியலில் விளையாட்டையும் சேர்க்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதால்,
அந்த விருதைப் பெறும் முதல் விளையாட்டாளராக சச்சின் டெண்டுல்கர் இருப்பார் என்று பரவலாக நம்பப்படுகிறது. பாரத் ரத்னா விருதுக்கு தகுதிபெறும் துறைகளில் ஒன்றாக விளையாட்டைச் சேர்க்குமாறு பிரதமர் அலுவலகத்திற்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறி்த்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள விலாஸ் ராவ் தேஷ்முக், சச்சின் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா விருதைப் பெறும் அனைத்துத் தகுதிகளும் உள்ளதென்றும், இது தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.

Share/Bookmark

2 comments:

  1. சச்சின் டெண்டுல்கரை விட அதிக தகுதிகள் வாய்ந்த நபர் கிரிக்கெட்டில் கபில்தேவ் இருக்கிறார். மற்றவிளையாட்டுகளிலும் இருக்கிறார்கள். கிரிக்கெட்டில் கொடுக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருந்தால் கபில் தேவிற்கு கேளுங்கள். இந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு ஆழமாக பரவி இருப்பதற்கு சச்சினை விட கபில்தேவ் அதிக காரணமாக இருப்பார்

    ReplyDelete
  2. HE CLAIMS THAT HE IS NOT A CRICKETER AND HE IS AN ACTOR IN HIS TAX FORM BCOZ OF TAX BENEFIT

    DO YOU REALLY THINK HE DESERVES BHARAT RATNA

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...