மூன்றாம் கண்.,: அமெரிக்க விமானத் தாக்குதல் - பாகிஸ்தானில் 45 தீவிரவாதிகள் பலி

Pages

Wednesday, July 13, 2011

அமெரிக்க விமானத் தாக்குதல் - பாகிஸ்தானில் 45 தீவிரவாதிகள் பலி



பாகிஸ்தானில் நேற்று முன்தினம் அமெரிக்கா நடத்திய நடத்திய விமானத் தாக்குதலில் சுமார் 45 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானுக்கான நிதிஉதவியை நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில் அமெரிக்கா நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், இருநாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள வடக்கு வரிஜிஸ்தானில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இருப்பதாக சந்தேகப்பட்ட ஒரு கட்டிடங்களின் மீது ஆளில்லா விமானங்களைக் கொண்டு நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இந்தத் தாக்குதலில் சுமார் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். அது போல தெற்கு வரிஜிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா தாக்குதல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதல்கள் பாகிஸ்தானின் அனுமதி இன்றி தன்னிச்சையாக அமெரிக்காவால் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு தன்னிச்சையாக தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று ஏற்கனவே பலமுறை அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கான நிதி உதவியில் சுமார் 800மில்லியன் டாலர்களை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இந்நிலையில், பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா இவ்வாறு தாக்குதல் நடத்தி இருப்பது இரு நாட்டு உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...