மூன்றாம் கண்.,: ஆந்திராவில் உலகின் ஆக பெரிய யுரேனிய சுரங்கம் கண்டுபிடிப்பு

Pages

Tuesday, July 19, 2011

ஆந்திராவில் உலகின் ஆக பெரிய யுரேனிய சுரங்கம் கண்டுபிடிப்பு



ஆந்திர மாநிலத்தில் துலப்பள்ளி அருகே யுரேனிய சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது உறுதி செய்யப்பட்ட தகவல் படி, சுமார் 49,000 டன் அளவு யுரேனியம் கிடைக்கும் என்றும், சுரங்கத்தை மேலும் ஆய்வு செய்தால் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் டன் வரை கிடைக்கும் என அணு சக்தி ஒழுங்கு வாரியம் தெரிவித்துள்ளது. அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் இதுவே உலகின் ஆக பெரிய யுரேனிய சுரங்கமாக இருக்கும்  என நம்பபடுகிறது. அணு சக்தி மற்றும் அணு மின் உற்பத்திக்கு யுரேனியம் இன்றியமையாதது. இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து அணு மின் ஆலைகளும், தனது யுரேனிய தேவைக்கு, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளையே நம்பி வருகின்றன. தற்போது யுரேனிய சுரங்கம் கிடைத்து இருப்பது மூலம், இந்தியாவின் மின் உற்பத்தி தேவையை வெகுவாக பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது. உதாரணமாக, இந்த புதிய சுரங்கம் மூலம் கிடைக்கும் யுரேனியத்தை கொண்டு சுமார் 8000 மெகா வாட் உற்பத்தி செய்யும் மின் ஆலை ஒன்றை அமைத்து 40 வருடங்களுக்கு இயக்க முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.  இது குறித்து பேசிய வாரியத்தின் செயலர் பானர்ஜி, சுரங்கம் தோண்டும் பணிகள் இன்னும் 6 மாதத்தில் ஆரம்பிக்க்படும் என தெரிவித்தார்.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...