மூன்றாம் கண்.,: இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 20 டி.வி.நடிகைகள் கைது

Pages

Tuesday, July 26, 2011

இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 20 டி.வி.நடிகைகள் கைது
இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 20 -க்கு மேற்பட்ட டி.வி.நடிகைகளை ‌கொழும்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் தலைநகர் கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்களில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 4 அழகிகளை பிடித்து விசாரணை நடத்தியதில அவர்கள் இலங்கையில் டி.வி. சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மிகப்பெரிய அளவிலான நெட்வொர்க் மூலம் விபச்சார தொழில் நடந்து வந்ததும், இதில் 20-க்கும் மேற்பட்ட டி.வி. நடிகைகள் ‌சம்பந்தப்படிருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையின் தேசிய குழந்தைகள்பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பெண் பாலியல் தொழிலாளர்கள் இத்தகைய தொழிலில்ஈடுபட்டடிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இலங்கையில் மத்திய பகுதியான அனுராதாபுரத்தில் தான் பாலியல் தொழிலாளர்கள் அதிகம் வசிப்பதும் இவர்கள்தான் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் உள்ள மசாஜ் கிளப்புகளில் பணியாற்றுவதுடன் விபச்சார ‌ தொழிலிலும் ஈடுபட்டது தெரியவந்துளளது.


Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...