மூன்றாம் கண்.,: விசாரணை முடிந்தது சன் பிக்சர்ஸ் சக்சேனா சிறையில் அடைப்பு

Pages

Sunday, July 17, 2011

விசாரணை முடிந்தது சன் பிக்சர்ஸ் சக்சேனா சிறையில் அடைப்புமாப்பிள்ளை' பட வினியோக விவகாரத்தில் கைதான, "சன் பிக்சர்ஸ்' சக்சேனாவிடம் இரண்டு நாள் விசாரணை முடிந்ததை அடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் செல்வராஜ்,
சண்முவேல், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில், "சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது கூட்டாளி ஐயப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்."மாப்பிள்ளை' பட வினியோகம் தொடர்பாக, சக்சேனா தன்னை மிரட்டியதாக, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஹித்தேஷ் ஜபக், போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் சக்சேனாவை கோடம்பாக்கம் போலீசார் கைது செய்து, 15ம் தேதி சைதாப்பேட்டை 17வது கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.இந்த வழக்கில் மேலும் விசாரிக்க வேண்டியுள்ளதால், சக்சேனாவை ஏழு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் அனுமதி கோரினர். இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, மாஜிஸ்திரேட் பிரியா உத்தரவிட்டார்.இரண்டு நாட்கள் அனுமதி மாலை முடிந்ததால், போலீசார் மாலை சக்சேனாவை, மாஜிஸ்திரேட் பிரியா முன் ஆஜர்படுத்தினர். அவரை, காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து, புழல் சிறையில் சக்சேனா அடைக்கப்பட்டார்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...