மூன்றாம் கண்.,: இணையத்தில் ஒபாமா பற்றிய வதந்தி

Pages

Tuesday, July 5, 2011

இணையத்தில் ஒபாமா பற்றிய வதந்திஅமெரிக்கா அதிபர் ஒபாமா சுடப்பட்டதாக பொக்ஸ் தொலைக்காட்சியின் டுவிட்டர் இணையதளத்தில் தகவல் வெளியானது குறித்து அந்நாட்டு ரகசியப் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தகவலை ரகசியப் பொலிஸ் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் ஓகில்வி இன்று தெரிவித்தார். அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சியான "பொக்ஸ் நியூஸ்" பயன்படுத்தி வரும் டுவிட்டர் இணையதளப் பக்கத்தில் ஒபாமா பற்றிய செய்தி வெளியானது. அதில்,"ஜூலை 4 மிகவும் வருத்தமான தினம். அதிபர் ஒபாமா இறந்துவிட்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்" என்று கூறப்பட்டிருந்தது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனிடையே தங்களது டுவிட்டர் பக்கம் எப்படி சிதைக்கப்பட்டது என்பது குறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று பொக்ஸ் நியூஸ் இணையதளத்தின் நிர்வாகி மிசென்டி கூறியுள்ளார்.
Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...