மூன்றாம் கண்.,: கருணாநிதியை சந்தித்தார் பிரணாப் முகர்ஜி

Pages

Saturday, July 9, 2011

கருணாநிதியை சந்தித்தார் பிரணாப் முகர்ஜி




இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த இரண்டாவது அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலகியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த பிரணாப் முகர்ஜி,
கருணாநிதியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தோல்வியடைந்த நிலையில், கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்ட பிறகு, பிரணாப் முகர்ஜி கருணாநிதியை முதற்தடவையாக சந்தித்துள்ளார். காங்கிரஸ் தலைவி சோனியாவுடன் கருணாநிதி மற்றும் மகள் கனிமொழி அந்தச் சந்திப்பு துவங்கியபோது, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, திமுக சார்பில், துரைமுருகன், பொன்முடி, தயாநிதி மாறன் ஆகியோர் உடனிருந்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர்கள் வெளியே சென்ற பிறகு, பிரணாப் முகர்ஜி, கருணாநிதியுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, பல ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருவது போல, காங்கிரஸ் திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்று தெரிவித்தார். ``காங்கிரஸ் திமுக உறவு இருக்கிறதா இல்லையா என்பது குறித்து பெருமளவில் செய்திகளும் ஊகங்களும் வெளியாகி வருகின்றன. நான் கூற விரும்புவது என்னவென்றால், இந்தக் கூட்டணி இருக்கிறது, கூட்டணி தொடரும். அது மேலும் வலுப்படுத்தப்படும்,’’ என்றார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ள நிலையில், அதில் திமுகவும் இடம் பெறுவது குறித்து கருணாநிதியுடன் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பதவி விலகியதை அடுத்தும், தற்போது தயாநிதி மாறன் பதவி விலகியதை அடுத்தும், திமுகவுக்கான இரண்டு காபினட் இடங்கள் உள்ளன. ஆனால், அந்த இடங்களுக்கு திமுக பிரதிநிதிகளை நியமிப்பதில் திமுக தலைமை ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.


Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...