மூன்றாம் கண்.,: தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமராகிறார்

Pages

Sunday, July 3, 2011

தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமராகிறார்
தாய்லாந்தில் எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால், இக்கட்சியின் தலைவரும்,
முன்னாள் பிரதமரின் சகோதரியுமான யிங்லக் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார். மொத்தமுள்ள 500 இடங்களில் 260 இடங்களை ப்யூதாய் கட்சி கைப்பற்றியுள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு 163 இடங்கள் கிடைத்துள்ளன. எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால் முன்னாள் பிரதமர் ஷினவத்ரேவின் சகோதரியும், இக்கட்சியின் தலைவருமான யிங்லக்,44, புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார். தற்போதைய பிரதமர் அபிஜித், புதிய பிரதமராகவுள்ள யிங்லக்குக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். யிங்லக், தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                                                                           


Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...