மூன்றாம் கண்.,: காஞ்சி மடாதிபதிகள் நீதிமன்றில் ஆஜர்

Pages

Monday, July 18, 2011

காஞ்சி மடாதிபதிகள் நீதிமன்றில் ஆஜர்


காஞ்சிபுரம் வரதாரஜப் பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பில், காஞ்சி மடாதிபதிகள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட
குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 24 பேரும் திங்கட்கிழமை(18.7.11) புதுவை தலைமை நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் முதல் எதிரியாக குற்றாஞ்சாட்டப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி, அவரது தம்பி ரகு மற்றும் காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் ஆகியோரிடம் மட்டும் 550 கேள்விகள் கேட்கப்பட்டன என்று இந்த வழக்கின் தலைமை அரச வழக்கறிஞரான தேவதாஸ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். சங்கரராமன் இந்த நால்வரும், இது பொய் வழக்கு, இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்ததாகவும் அதை நீதிபதி வரையறுத்துக் கொண்டு வழக்கை செவ்வாய்க் கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். செவ்வாய்கிழமை இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எஞ்சியுள்ள மீதி 20 பேரிடம் வழக்கு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் தேவதாஸ் கூறுகிறார். சங்கரமடம் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட நான்கு பேரிடம் விளக்கங்கள் கோருவது முடிந்து விட்டது என்றும், செவ்வாய்கிழமை அவர்கள் நீதிமன்றத்துக்கு வருவதிலிருந்து விலக்கு கோரினால் அதை தமது வழக்கறிஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்து கோரலாம் எனவும் கூறிய அரசின் தலைமை வழக்கறிஞர், மற்ற 20 பேரும் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராகியே தீர வேண்டும் எனவும் தெரிவித்தார். அதன் பின்னர் அவர்கள் தரப்பு சாட்சிகள் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடைபெற்று, நீதிமன்றத்தில் வாதங்கள் இடம்பெறும் எனவும், அதனை அடுத்து நீதிபதி தீர்ப்புக்கான தேதியை அறிவிப்பார் எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...