மூன்றாம் கண்.,: நித்தியானந்தா புகார் எதிரொலி- நக்கீரன் கோபால் முன்ஜாமீன் மனு தாக்கல்

Pages

Friday, July 15, 2011

நித்தியானந்தா புகார் எதிரொலி- நக்கீரன் கோபால் முன்ஜாமீன் மனு தாக்கல்


நித்தியானந்தாவின் மேனேஜர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து நக்கீரன் ஆசிரியர் கோபால்,
இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.  நித்தியானந்தாவின் மேனேஜரான நித்ய ஆத்மபிரபானந்தா என்பவரும், அவருடன் வந்த சீடர் குழுவும் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து சன் டிவி, தினகரன், நக்கீரன் பத்திரிக்கை மீது புகார் ஒன்றைக்க கொடுத்தனர். அதில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் ஆபாச கோலத்தில் இருப்பது போன்ற வீடியோ ஒளிபரப்பியதாகவும், பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் நக்கீரன் கோபால் மற்றும் காமராஜ் ஆகியோர் முன்ஜாமீன் கோரி செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை இன்று நீதிபதி தேவதாஸ் விசாரிக்கவுள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...