மூன்றாம் கண்.,: ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு திருப்பதி கோயிலுக்குள் அனுமதி மறுப்பு

Pages

Monday, July 25, 2011

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு திருப்பதி கோயிலுக்குள் அனுமதி மறுப்பு


ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு திருப்பதி கோயிலுக்குள் அனுமதி மறுப்பு. நடிகர் ரஜினி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சமயத்தில் அவரது மகள் சவுந்தர்யா திருப்பதி ஏழுமலையானிடம் தனது தந்தை பூரண குணம் அடைய வேண்டி பிரார்த்தனை செய்தார்.
இந்நிலையில் ரஜினி பூரண குணம் அடைந்து சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பினார். இதையடுத்து தனது வேண்டுதலை கேட்ட ஏழுமலையானை தரிசிக்க சவுந்தர்யா முடிவு செய்தார். இதற்காக தனது தந்தையின் நண்பரான நடிகர் மோகன் பாபு மூலம் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்கி சென்றார். அவரும் கணவர் அஸ்வினும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள வி.ஐ.பி. தரிசன நுழைவு வாயிலுக்கு சென்றனர். அப்போது அவர்களிடம் இருந்த தரிசன டிக்கெட்டை கோவில் ஊழியர்கள் பரிசோதித்தனர். அதில் சவுந்தர்யா-அஸ்வின் இருவரது பெயரும் இல்லை. ரஜினி குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயர் மட்டும் தான் இருந்தது. இதனால் ஊழியர்கள் இருவரையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் இருவரும் அங்கு செய்வதறியாது தவித்தனர். பின்னர் சவுந்தர்யா நடிகர் மோகன்பாபுவை போன் மூலம் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து மோகன்பாபு தேவஸ்தான உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நான்தான் ரஜினி மகளுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தேன். அதில் தவறுதலாக இருவரின் பெயர் விடுபட்டு விட்டது. அவர்களை தரிசனம் செய்ய அனுமதியுங்கள் என்று கேட்டு கொண்டார். இதையடுத்து அங்கு அதிகாரிகள் சென்று ரஜினி மகள்-மருமகனை தரிசனத்திற்கு அனுமதித்தனர். சுமார் 40 நிமிடத்திற்கு பிறகு சவுந்தர்யா கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த சவுந்தர்யா நிருபர்களிடம் கூறும் போது, எனது தந்தை குணம் அடைந்ததும் ஏழுமலையானை தரிசிப்பதாக வேண்டி இருந்தேன். இதற்காக இங்கு வந்தேன். எனது தந்தை தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவர் அடுத்த மாதம் 14-ந் தேதி திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகிறார் என்றார். ரஜினி மகள்-மருமகனுக்கு திருப்பதி நகர ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அவர்களுக்கு ஏழுமலையான் படங்களை பரிசாக வழங்கினார்.

Share/Bookmark

1 comment:

  1. பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...