மூன்றாம் கண்.,: மும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி; 113க்கும் மேற்பட்டோர் காயம்

Pages

Wednesday, July 13, 2011

மும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி; 113க்கும் மேற்பட்டோர் காயம்




மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 113 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்,
ஜாவேரி பஜார் பகுதி, தெற்கு மும்பை ஓபரா ஹவுஸ் என மூன்று இடங்களில் அடுத்தடுத்து இந்த குண்டுகள் வெடித்துள்ளன. அனைத்து குண்டுவெடிப்புகளுமே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் நடந்துள்ளது. இந்த மூன்று குண்டு வெடிப்புகளிலும், 20 பேர் பலியானதாகவும், 110க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜாவேரி பஜார் பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நகரில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழும் என்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்துக்கு மத்திய புலனாய்வுத் துறையினர் விரைந்துள்ளனர். இந்த வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் குறித்து ஆய்வு நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே இந்தத் தாக்குதல், பயங்கரவாத இயக்கங்கள் இணைந்து நடத்திய தாக்குதல் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தில்லியில் புதன்கிழமை இரவு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, மாலை 6.45 மணியளவில் ஒரு சில நிமிடங்களில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. பயங்கரவாதிகள் திட்டமிட்டு, ஒருங்கிணைந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். சம்பவ இடத்துக்கு தேசிய பாதுகாப்புப் படையினர் சென்றுள்ளனர். தில்லி, ஹைதராபாதில் உள்ள மத்திய தடய அறிவியல் மையத்தில் இருந்து ஆய்வாளர்கள் மும்பை சென்றுள்ளனர். ஐஜி தலைமையில் தேசிய விசாரணை அமைப்பினரும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார் ப.சிதம்பரம்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...