மூன்றாம் கண்.,: இ‌ன்று இ‌ந்‌‌தியா வரு‌கிறா‌ர் ஹிலாரி கிளிண்டன்

Pages

Monday, July 18, 2011

இ‌ன்று இ‌ந்‌‌தியா வரு‌கிறா‌ர் ஹிலாரி கிளிண்டன்
2 நா‌ள் பயணமாக அமெரிக்க அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் ஹிலாரி கிளிண்டன் இன்று டெல்லி வருகிறார்.
இந்தியா - அமெரிக்கா இடையே பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கு‌றி‌‌த்து பேசுவத‌ற்காக இ‌ன்று டெ‌ல்‌லி வரு‌ம் ஹிலாரி கிளிண்டனுட‌ன் 25 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினரும் வருகிறார்கள். நாளை இந்திய அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் எஸ்.எம்.கிருஷ்ணாவை ச‌ந்‌தி‌த்து பேசு‌ம் ஹிலாரி, அ‌ப்போது ‌தீவிரவாதத்தை எதிர்த்து போராடுதல், மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு, இராணுவ தகவல்களை பரிமாற்றம் செய்தல், கல்வி மற்றும் வர்த்தகம், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானில் நீடிக்கும் தீவிரவாதம் பற்றி பேச்சு நடத்தப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசுகிறார். டெல்லி பயண‌த்தை முடித்துக்கொண்டு வரு‌ம் 20ஆ‌ம் தே‌தி சென்னை வரு‌ம் அவ‌ர் சில நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, 21ஆ‌ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...